நடிகர் சூர்யாவின் அடுத்த திரைப்படம் 'கருப்பு' இந்த திரைப்படம் எப்போது வெளியாகும் என்று இரசிகர்கள் எல்லோரும் ஆவலுடன் காத்திருக்கின்ற நிலையில் நடிகர் சூர்யா தற்போது வெங்கி அட்லூரி இயக்கத்தில் புதிய திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
மேலும் ஜீத்து மாதவன் இயக்கத்தில் புதிய திரைப்படத்தில் நடிக்கவும் ஒப்பந்தமாகி இருக்கிறார். இதில் சூர்யா பொலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் 'டிராகன்' திரைப்படத்தை இயக்கி கவனம் ஈர்த்த அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் சூர்யா நடிக்கப் போவதாக கூறப்படுகிறது.அஷ்வத் மாரிமுத்து தற்போது சிம்புவை வைத்து 'காட் ஆப் லவ்' திரைப்படத்தை இயக்க இருக்கும் நிலையில் இதனைத்தொடர்ந்து அவர் சூர்யாவுடன் கைகோர்ப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.