சூரிய குடும்பத்தைச் சேர்ந்த 6 கோள்கள் ஒரே நேர்க்கோட்டில் அணிவகுத்து கண்கவர் காட்சியை வழங்கவுள்ளன.
இந்த அரிய 'கோள்களின் அணிவகுப்பை' (Planetary Parade) பெப்ரவரி 28 ஆம் திகதி மாலை காணலாம்.
வானில் அணிவகுக்கப் போகும் அந்த 6 கோள்கள்: புதன், வெள்ளி, நெப்டியூன், சனி, யுரேனஸ் மற்றும் வியாழன்.
இந்த அணிவகுப்பிலேயே மிக எளிதாகத் தெரிவது வியாழன்தான்.
வெறும் கண்ணால் பார்க்கலாம் என்றாலும், சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு மிக வேகமாக மறைந்துவிடும் என்பதால், தாமதிக்காமல் உடனே பார்த்துவிட வேண்டும்.
இது வானில் உயரத்தில் இருப்பதால், வளிமண்டலத் தூசுகள் குறுக்கிடாது.
வெறும் கண்ணால் பார்ப்பது கடினம் என்பதால்,சிறிய தொலைநோக்கி (Telescope) வைத்திருந்தால் இதைக் கண்டுபிடிப்பது எளிதாக இருக்கும் என்று தெரிவித்துள்ளனர்.