'3', 'வை ராஜா வை', 'லால் சலாம்' போன்ற திரைப்படங்களை இயக்கியவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.
இதைத்தொடர்ந்து, ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பன்மொழி திரைப்படம் ஒன்றை இயக்க ஒப்பந்தமாகியுள்ளார். இத்திரைப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார்.
இந்த நிலையில், இத்திரைப்படத்தின் Title Teaser வெளியாகியுள்ளது. இத்திரைப்படத்திற்கு 'டெக்ஸ்லா' என பெயரிடப்பட்டுள்ளது.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய 5 மொழிகளில் டைட்டில் Teaser வெளியிடப்பட்டுள்ளது. தமிழில் இசையமைப்பாளர் அனிரூத் Teaserஐ வெளியிட்டுள்ளார்.
இந்த Teaser தற்போது இரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.