தகவல் அறியும் சுதந்திர சட்ட மூலம் மற்றும் தேசிய கணக்காய்வு சட்ட மூலத்துக்கு அமைச்சரவையின்அனுமதி கிடைத்துள்ளது.
தகவல் அறியும் சுதந்திர சட்ட மூலம் மற்றும் தேசிய கணக்காய்வு சட்ட மூலத்துக்கு அமைச்சரவையின்அனுமதி கிடைத்துள்ளது.
நேற்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, புதிய தேர்தல் திருத்தச் சட்ட மூலத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
நேற்று இந்த சட்டமூலம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.
இதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இது தொடர்பான மேலதிக நடவடிக்கைகளை எடுக்கும் அதிகாரம் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது