அக்கரப்பத்தனை பொலிஸ்பிரிவிற்குட்பட்ட அக்கரப்பத்தனை பகுதியில் சிறுமி ஒருவரை பாலியல் வன்புணர்விற்குட்படுத்திய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார் என அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
நான்கு வயது சிறுமியே இவ்வாறு வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
சிறுமி நுவரரெலியா வைத்தயசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், சந்தேக நபரை நீதிமன்றில் முன்னிலை படுத்த அக்கரப்பத்தனை பொலிசார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.