நம்ம தல அஜித்குமாரின் அபாரமான விசிறியும், அஜித்மீது பித்துப் பிடித்த பாசக்காரருமானவர் நடிகர் சிம்பு என்பது உலகுக்கே தெரிந்த உண்மை. அஜித்தின் எந்தப் படம் திரைக்கு வந்தாலும், முதல் நாள் முதல் காட்சியில் பார்த்து கைதட்டி ஆரவாரித்து விசிலடித்து, வாழ்த்துச் சொல்லி சந்தோசப்படுகின்றவர் சிம்பு.
இந்நிலையில், சிம்பு மற்றும் ஹன்சிஹா மேத்வானியின் நடிப்பில் எடுக்கப்பட்டு நீண்டகாலமாக கிடப்பில் கிடக்கும் படம் தான் வாலு. தயாரிப்பாளர் நிதி நெருக்கடி காரணமாக படம் இழுபட்டு வந்தது. வெளியீட்டுத் திகதிகள் மாறி மாறி வெளியிடப்பட்டு வந்தன. இப்பொழுது மீண்டும் திகதி உறுதிப்படுத்தபட்டுள்ளது.
அதாவது, எதிர்வரும் மே மாதம் 9 என்று சொல்லப்படுகிறது. அத்தோடு, தல அஜித்தின் பிறந்த தினத்துக்காக தன்னால் ஒரு ஸ்பெசல் செய்யப்பட வேண்டுமென எத்தனித்த சிம்பு, அதை செய்தும் காட்டியுள்ளார். அதாவது, நாளை தல பிறந்த தினத்தன்று சிம்புவின் வாலு படத்தின் இரண்டாவது ட்ரைலர் வெளியிடப்படவுள்ளது. இது அஜித்துக்கு மரியாதை செலுத்தும் விதமாகத்தான் வெளியிடப்படவுள்ளது என சிம்பு தெரிவித்துள்ளார்.
-கோடம்பாக்கக் குருவி-