Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
04
கருமை நிறம் நீங்கி சருமம் அழகு பெற உதவும் கடுகு எண்ணெய் பற்றிய அழகு குறிப்பு..

Sooriyanfm Gossip - கருமை நிறம் நீங்கி சருமம் அழகு பெற உதவும் கடுகு எண்ணெய் பற்றிய அழகு குறிப்பு..Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,219 Views
உடலுக்கு நன்மை செய்யும் எண்ணெய்களில் கடுகு எண்ணெயும் முக்கியமான ஒன்றாகும் . அதிசயிக்கதக்க வகையில் இந்த கடுகு எண்ணெய் சருமத்திற்கும், கூந்தலுக்கும் அளவற்ற நன்மைகளை செய்வதாக கூறுகின்றார்கள் துறை சார் வல்லுநர்கள்.
அத்தகைய கடுகு எண்ணெயின் நன்மைகள் பற்றி இன்றைய அழகுக்குறிப்பு பகுதியில் பார்ப்போம். கடுகிலிருந்து தயாரிக்கப்படும் இந்த கடுகு எண்ணெய் இதயத்திற்கு நன்மை செய்கின்றது என்பது நம் எல்லோருக்கும் தெரியும்.

ஆனால் கடுகு எண்ணைக்குள் அழகு தரும் இரகசியங்களும் ஒளிந்திருக்கின்றன என்பது பொதுவாக யாருக்கும் தெரிவதில்லை. இதை பயன்படுத்தி பார்த்தால் புரிந்து கொள்ளலாம். சருமத்தை சுத்தப்படுத்த கூடிய ஓர் இயற்கைப்பொருளாக கடுகு எண்ணெய் உள்ளது.

சருமத்திற்கு போடும் ஒப்பனையை கலைக்க பக்க விளைவை ஏற்படுத்தாத ஓர் இயற்கை எண்ணையாக இந்த கடுகு எண்ணெய் உள்ளது. சருமத்தின் துளைகளை அடைக்காது அழுக்குகளை நீக்கும் முதன்மை பொருளாக இந்த எண்ணெய் உள்ளது. வெள்ளையாக இருந்தாலும் பலருக்கும் இன்னும் கலராக வேண்டும் என்ற ஆசை உண்டு.

அதற்கும் இந்த எண்ணெய் பயன்படுகிறது. தினமும் இரவில் முகத்தை சுத்தமாக அழுக்குகள் போக கழுவி கடுகு எண்ணெயை முகத்திற்கு பூசி மசாஜ் செய்துவர வேண்டும். இதனால் முகம் பளீரென மாறி அழகு பெறும் .

மேலும் முகத்தில் காணப்படக்கூடிய கரும்புள்ளிகள் , தழும்புகளையும் போக்கும். கடுகு எண்ணெய் விற்றமின் 'ஈ' சத்தினை கொண்டுள்ளது. 'சன்ஸ்கிரீனுக்கு' இயற்கையான மாற்று பொருளாக கடுகு எண்ணெய் உள்ளது. இது சருமத்திலிருக்கும் அழுக்குகளை நீக்குவதோடு இறந்த செல்களையும் வெளியேற்றுகிறது.

புதிய செல்களால் முகம் எப்போதும் பளீரென்று மாறுகின்றது. ஆயுள்வேத மருத்துவத்தில் உடலுக்கு மசாஜ் செய்ய இந்த எண்ணையை பயன்படுத்தி வருகின்றனர். அவ்வாறான கடுகு எண்ணெய் சருமத்திற்கு மட்டுமல்ல கூந்தலுக்கும் அதிகப்படியான நன்மைகளை தருகின்றது.

கூந்தல் வளர்ச்சி முதல் முடி உதிர்வை கட்டுப்படுத்துவது வரை கடுகு எண்ணெய் அதிகம் பங்களிக்கிறது.

எனவே மேற்சொன்ன வழிமுறைகளை பின்பற்றி கடுகு எண்ணெய் மூலம் சருமத்தினதும், கூந்தலினதும் அழகையும் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கலாம்.
 

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top