தளபதி விஜய் நடிப்பில் தற்போது வெளியாக இருக்கும் திரைப்படம் பீஸ்ட். இந்தத் திரைப்படத்தினை இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார்.இந்த திரைப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் மிக வேகமாக இடம் பெற்று வருகின்றது.மேலும் இத்திரைப்படம் ஏப்ரல் மாதம் 13ம் திகதி திரையரங்கில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திரைப்படத்தினை தொடர்ந்து தோழா உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய வம்சி பைடிப்பள்ளி இயக்கும் புதிய திரைப்படத்தில் நடிகர் விஜய் நடிக்கவுள்ளார். 'தளபதி 66' என்று பெயரிடப்பட்டுள்ள இந்தத் திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. மேலும் இதில் நடிக்கவுள்ள நடிகை குறித்த எதிர்ப்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்திருந்தது.
இந்த நிலையில், 'தளபதி 66' திரைப்படத்தின் கதாநாயகி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. தெலுங்கு திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வரும் நடிகை ராஷ்மிகா மந்தனா 'தளபதி 66' திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கவுள்ளதாக இந்தத் திரைப்படத்தின் இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளார்.