இரண்டு மிகப்பெரிய திரைப்படங்கள் ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் ஒன்றாக திரைக்கு வெளிவர உள்ளன.
தளபதி விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் வருகின்ற 13 ம் திகதி திரையரங்கில் வெளியாக உள்ளது. அதே போல யாஷ் நடித்துள்ள கேஜிஎப் - 2 திரைப்படம் வருகின்ற 14 ம் திகதி வெளியாகிறது.
இந்நிலையில், இந்த இரு படங்களுக்கான திரையரங்குகள் ஒதுக்கீடு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன்படி, பீஸ்ட் திரைப்படத்திற்கு 800 முதல் 850 திரையரங்குகளும், கேஜிஎப் - 2 திரைப்படத்திற்கு 200 முதல் 250 திரையரங்குகளும் ஒதுக்கப்பட உள்ளதாக திரையரங்கு உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.