நடிகர் விஜய் நடிக்கும் 'பீஸ்ட்' திரைப்படத்தின் 3 வது பாடல் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
நடிகர் விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் எதிர்வரும் 14 ஆம் திகதி வெளிவர இருக்கிறது. இத்திரரைப்படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் இருந்து ஏற்கெனவே வெளியான அரபிக்குத்து மற்றும் ஜாலியோ ஜிம்கானா ஆகிய பாடல்கள் இரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த நிலையில், தற்போது பீஸ்ட் திரைப்படத்தின் மூன்றாவது பாடல் வெளியாகி வைரலாகி வருகிறது. நேற்று மாலை 6 மணியளவில் வெளியான திரை தீப்பிடிக்கும் வெடி வெடிக்கும் என்று தொடங்கும் பாடலை படக்குழுவினர் வெளியிட்டு இரசிகர்களை சந்தோஷப்படுத்தி உள்ளனர். இந்த பாடலை இரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.