அதனுடன் சிறிதளவு ஒலிவ் எண்ணெய் சேர்த்து தலைக்கு வைத்து பதினைந்து நிமிடங்கள் ஊற வைத்து பின்னர் தலைக்கு குளிப்பதால் தலை குளிர்ச்சியடைவதுடன் முடியும் ஆரோக்கியமாகவும் நீளமாகவும் வளரும்.
செம்பருத்தி எண்ணெய் ..
செம்பருத்தி பூக்களை நன்கு உலரவைத்து பொடியாக அரைத்துக்கொள்ளவும். பின்னர் ஒரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெயுடன் இந்த பொடியை சேர்த்து நன்கு காய்ச்சி பின்னர் வடிகட்டி பயன்படுத்தி வர நீளமான கூந்தலை பெறலாம்.
சீரக எண்ணெய் ..
ஒரு பாத்திரத்தில் ஐந்து கப் தண்ணீர் மற்றும் ஒரு கைப்பிடி கருப்பு சீரக விதைகள் ஆகியவற்றை எடுத்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும். பின்னர் இந்த தண்ணீரை வடிகட்டி அதில் சிறிதளவு ஒலிவ் எண்ணெய் சேர்த்து தலைக்கு தடவி வர கூந்தல் வளர்ச்சி அதிகரிக்கும்.
வெங்காய எண்ணெய் ..
சிறிதளவு வெங்காய துண்டுகளுடன் சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்து அரைத்துக்கொள்ளவும். இதனுடன் சிறிதளவு தேங்காய் எண்ணெய் சேர்த்து சுட வைத்த பின் நன்கு ஆறவைத்து தலைக்கு தடவி வர கூந்தல் வளர்ச்சி அதிகரிக்கும்.
புதினா எண்ணெய் ..
புதினா இலைகளை அரைத்து அதிலிருந்து கிடைக்கும் எண்ணெயுடன் பாதாம் எண்ணெய் சிறிதளவு சேர்த்து இரண்டு எண்ணெயையும் ஒரு போத்தலில் அடைத்து சூரிய ஒளியில் இரண்டு நாட்களுக்கு வைத்து பின்னர் பயன்படுத்தி வர கூந்தல் நீண்டு வளரும்.
மூலிகை எண்ணெய் ..
தேங்காய் எண்ணெய் துளசி எண்ணெய் மற்றும் வேப்ப இலை ஆகியவற்றை சம அளவில் எடுத்து அரைத்து அதிலிருந்து கிடைக்கும் எண்ணெயினை நன்கு கொதிக்க வைத்து பின்னர் ஆறவைத்து பயன்படுத்தி வர கூந்தல் நன்கு நீண்டு வளரும்.
கறிவேப்பிலை எண்ணெய் ..
ஒரு பாத்திரத்தில் ஒரு கப் தேங்காய் எண்ணெயுடன் சிறிதளவு கருவேப்பிலை
சேர்த்து நன்கு சூடேற்றி பின்னர் ஆற வைத்து தலைக்கு தடவி வர கூந்தல் நீளமாக வளரும்.
நெல்லிக்காய் எண்ணெய் ..
நெல்லிக்காயினை தண்ணீர் இல்லாமல் பொடியாக அரைத்து அதனுடன் தேங்காய் எண்ணெய் சேர்த்து பாத்திரமொன்றில் சூடேற்றிகொள்ளவும். பின்னர் நன்கு ஆறிய பின்னர் தலைக்கு பயன்படுத்திவர கூந்தல் வளர்ச்சி அதிகரிக்கும்.
எனவே மேற்சொன்ன வழிமுறைகளை பின்பற்றி இயற்கைமுறையில் தயாரித்து இந்த எண்ணெய் வகைகளை பயன்படுத்தி வந்தால், கூந்தலானது கருமையாகவும் ஆரோக்கியமாகவும் அடர்த்தியாகவும் நன்கு நீண்டும் வளரும்.