தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் மாதவன்.இவரின் மகன் வேதாந்த், தன்னுடைய சின்ன வயது முதல் பல்வேறு நீச்சல் போட்டிகளில் கலந்துகொண்டு பதக்கங்களை வென்றுள்ளார்.
இந்த நிலையில் டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகனில் நடைபெற்றுவந்த, 2022-ம் ஆண்டு டேனிஷ் ஓபன் நீச்சல் போட்டியின், 1500 மீட்டர் பிரிவின் இறுதிப் போட்டியில் 10 பேர் கலந்துகொண்டனர். அந்தவகையில் இந்த போட்டியில் மாதவனின் மகன் வேதாந்த்வும் கலந்து கொண்டார்.இந்நிலையில் இப்போட்டியில் இவர் இரண்டாவது இடத்தைப் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.இந்நிலையில் தன் மகனின் வெற்றியை மகிழ்ச்சியுடன் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.