தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை காஜல் அகர்வால். இவர் பல முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்துள்ளார்.
பல முக்கிய திரைப்படங்களில் நடித்து வந்த நடிகை காஜல் அகர்வால் கடந்த வருடம் தொழிலதிபரான கெளதம் கிச்சிலு என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். தன்னுடைய திருமண வாழ்க்கைக்கு பிறகும் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வந்த காஜல் அகர்வால், கடந்தாண்டு கர்ப்பமானார். அதன்பின்னர் நடிப்பதை தவிர்த்து கொண்டு வந்தார்.
இந்த நிலையில் , நடிகை காஜல் அகர்வாலுக்கு நேற்றைய தினம் ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதையடுத்து நடிகை காஜல் அகர்வால் மற்றும் கெளதம் கிச்சிலு இருவருக்கும் சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.