இளம் வீரர்களுக்கு பாகிஸ்தான் சுப்பர் லீக் இருக்கின்றது. அதேபோன்று வயதில் மூத்த வீரர்களுக்கு மெகா ஸ்டார்ஸ் லீக் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார். 'உலக கிரிக்கெட் அரங்கில் பல்வேறு லீக் கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இண்டியன் பிறீமியர் லீக், பாகிஸ்தான் சுப்பர் லீக், கரிபியன் பிறீமியர் லீக் உட்பட பல்வேறு நாடுகளில் இருபது 20 கிரிக்கெட் போட்டிகள் அரங்கேற்றப்படுகின்றன. இவை அனைத்திலும் இளம் வீரர்கள் அசத்தி வருகின்றனர்.
இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் விளையாடி தற்போது ஓய்வுபெற்றுள்ள வீரர்களை இணைத்துக்கொண்டு மெகா ஸ்டார்ஸ் லீக் கிரிக்கெட் போட்டியை நடத்தவுள்ளேன்' என அப்றிடி தெரிவித்தார். 'பொழுதுபோக்கு ரீதியாக மெகா மெகா ஸ்டார்ஸ் லீக் தொடர் நடத்தப்படும். ராவல்பிண்டியில் செப்டெம்பர் மாதம் நடத்தப்படும் இப் போட்டி பத்து (T20) கிரிக்கெட் போட்டியாக அமையும். முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், முன்னாள் விளையாட்டு வீரர்கள், முன்னாள் விளையாட்டுத்துறை ஊடகவியலாளர்கள் ஆகியோருக்கு நிதி உதவி அளிப்பதை நோக்காகக்கொண்டே இப் போட்டி நடத்தப்படவுள்ளது' என்றார் அப்ரிடி.
இந்த சுற்றுப் போட்டியில் 6 அணிகள் விளையாடவுள்ளன. இப்போட்டியில் வெளிநாடுகளைச் சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் விளையாடுவர். எனக்கு வயதாகி விட்டது. எனவே நானும் மெகா மெகா ஸ்டார்ஸ் லீக்கில் விளையாடுவேன். முஷ்தாக் அஹ்மத், இன்ஸமாம்-உல்-ஹக், வக்கார் யூனிஸ் ஆகியோரும் இப் போட்டியில் விளையாடுவர்' என அப்ரிடி மேலும் குறிப்பிட்டார்.