Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
28
எல்லோருக்கும் பிடித்த மசால் வடை

Sooriyan FM Gossip - எல்லோருக்கும் பிடித்த மசால் வடைSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

678 Views
சுவையான மசால் வடையை எவ்வாறு செய்ய வேண்டும்?
தேவையான பொருட்கள்:
கடலைப்பருப்பு – ஒரு கப்,
பெரிய வெங்காயம் – 1,
பச்சை மிளகாய் – 4,
மிளகாய் – 2,
சோம்பு – ஒரு கரண்டி,
மிளகு – அரை கரண்டி,
பூண்டு – 6 பல்,
இஞ்சி சிறிய துண்டு – 1,
எண்ணெய் – 200 கிராம்,
உப்பு – ஒரு கரண்டி,
கறிவேப்பிலை – ஒரு கொத்து,
கொத்தமல்லித்தழை – ஒரு கொத்து.

செய்முறை:

முதலில் ஒரு கப் கடலைப்பருப்பை இரண்டு முறை தண்ணீர் ஊற்றி நன்றாக கழுவிக் கொள்ள வேண்டும். பின்னர் இதனுடன் 3 டம்ளர் தண்ணீர் ஊற்றி, மூன்று மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பிறகு கடலை பருப்பில் உள்ள தண்ணீரை வடிகட்டி கொள்ள வேண்டும். பின்னர் ஊறவைத்த கடலை பருப்பிலிருந்து ஒரு கரண்டி கடலைப் பருப்பை தனியாக எடுத்து வைக்க வேண்டும்.

பிறகு மீதமிருக்கும் கடலைப்பருப்பை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து, அதனுடன் உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவேண்டும். பிறகு வெங்காயம் பச்சை மிளகாய் மற்றும் வரமிளகாய் இவற்றை பொடியாக நறுக்கி வைக்க வேண்டும். பின்னர் ஒரு கடாயில் ஒரு கரண்டி சோம்பு சேர்த்து பொன்னிறமாக வறுத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு வறுத்த சோம்பு மற்றும் அரை கரண்டி மிளகை ஒரு சிறிய உரலில் சேர்த்து நன்றாகப் பொடித்துக் கொள்ள வேண்டும். பின்னர் 6 பல் பூண்டையும் உரலில் சேர்த்து தட்டி வைக்க வேண்டும். பின்னர் அரைத்து வைத்துள்ள கடலைப்பருப்புடன் வெங்காயம், பச்சை மிளகாய் , மிளகாய் இவற்றை சேர்த்துக்கொள்ள வேண்டும். பின்னர் இவற்றுடன் கொத்தமல்லி மற்றும் கருவேப்பிலையை பொடியாக நறுக்கி சேர்த்து அனைத்தையும் ஒன்றாக கலந்து கொள்ள வேண்டும்.

பிறகு இறுதியாக எடுத்து வைத்துள்ள ஒரு கரண்டி கடலைப் பருப்பையும் சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ள வேண்டும். பின்னர் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் நன்றாக காய்ந்ததும் அதில் பிசைந்து வைத்துள்ள மாவிலிருந்து ஒவ்வொரு உருண்டையாக எடுத்து உள்ளங்கையில் வைத்து தட்டி, எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.

அவ்வளவுதான் சுவையான மசால்வடை தயாராகிவிட்டது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top