Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
29
இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணித் தலைவராக பென் ஸ்டோக்ஸ் !

Sooriyan FM Gossip - இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணித் தலைவராக பென் ஸ்டோக்ஸ் !Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,122 Views
இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணித் தலைவராக சகலதுறை வீரர் பென் ஸ்டோக்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். டெஸ்ட் அணித் தலைவர் பதவியிலிருந்து ஜோ ரூட் விலகிக்கொண்டதை அடுத்து அணித் தலைமையில் வெற்றிடம் ஏற்பட்டது.



இந்நிலையில் இங்கிலாந்து டெஸ்ட் அணியின் புதிய தலைரவாக பென் ஸ்டோக்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இங்கிலாந்து ஆடவர் கிரிக்கெட்டின் புதிய முகாமைத்துவ பணிப்பாளர் ரொப் கீயின் சிபாரிசின் பேரில் பென் ஸ்டோக்ஸ் டெஸ்ட் அணித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பென் ஸ்டோக்ஸிடம் அணித் தலைமைப் பதவியை ஒப்படைப்பதில் எனக்கு எவ்வித தயக்கமும் இல்லை. இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியை அடுத்த சகாப்தத்துக்கு முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்ல நாங்கள் விரும்பும் சிறந்த மனநிலையையும் அணுகுமுறையையும் அவர் இரத்தினச் சுருக்கமாக கூறுகிறார். அவர் இப் பதவியை ஏற்றதையிட்டு நான் மகிழ்ச்சி அடைகின்றேன். அவர் மேலதிகப் பொறுப்பையும் கௌரவத்தையும் ஏற்கத் தயாராக இருக்கிறார். அவர் இந்தப் பதவிக்கு மிகவும் பொறுத்தமானவர் என ரொப் கீ தெரிவித்தார்.

கடைசியாக விளையாடிய 17 டெஸ்ட் போட்டிகளில் ஒரே ஒரு வெற்றியை ஈட்டியுள்ள இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல் தடவையாக 5 தொடர்களில் வெற்றிபெறாமல் இருக்கின்றது. அத்தகைய அணியையே பென் ஸ்டொக்ஸ் பொறுப்பேற்கிறார். எனவே அவருக்கு அணியை கட்டி எழுப்பும் மிகப் பெரிய பொறுப்பு இருப்பதுடன் பாரிய சவாலும் காத்திருக்கிறது.

இங்கிலாந்து டெஸ்ட் அணியின் தலைவர் பதவி எனக்கு கொடுக்கப்பட்டதையிட்டு பெருமை அடைகின்றேன். இதனை உண்மையான ஒரு பாக்கியமாக கருதுவதுடன் எதிர்வரும் கோடைக்காலத்தில் எனது பணியை ஆரம்பிப்பதற்காக காத்திருக்கின்றேன் என பென் ஸ்டோக்ஸ் தெரிவித்தார்.

30 வயதான பென் ஸ்டோக்ஸ், இதுவரை 79 டெஸ்ட் போட்டிகளில் 11 சதங்கள், 26 அரைச் சதங்களுடன் 5,061 ஓட்டங்களை மொத்தமாக பெற்றுள்ளார்

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top