ஹைப்பர்லிங்க் திரில்லர் கதையம்சம் கொண்ட திரைப்படமாக இந்த படம் உருவாகி உள்ளது. இந்த திரைப்படத்தில் நடிகர் அதர்வா முரளி, சரத்குமார், ரகுமான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
நிறங்கள் மூன்று திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜோய் இசையமைக்கிறார். கடந்த ஜனவரி 2 ம் திகதி இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியானது.
இப்பொழுது இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது. படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை பகிர்ந்து படப்பிடிப்பு நிறைவடைந்ததாக இயக்குனர் கார்த்திக் நரேன் தன்னுடைய வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
குறித்த படத்தின் புதிய அப்டேட்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.