சாணிக் காயிதம் படத்தில் நடித்தபோது இந்த படத்தின் இயக்குநர் நீ இல்லை,நடிகர் மட்டுமே என்று அடிக்கடி தனக்குத் தானே சொல்லிக் கொண்டாராம் செல்ராகவன்.
வீட்டில் ஒரு நடிப்பு ராட்சசனை வைத்துக் கொண்டு நடிப்பு ரொம்ப கஷ்டம் என்கிறார் செல்வராகவன்.
இது குறித்து அவர் கூறியதாவது,
நடிப்பு ரொம்ப கஷ்டம் என்று என் தம்பி தனுஷிடம் கூறினேன்.அவன் என்னை கிண்டல் செய்தான்.இப்போதாவது புரியுதா என கேட்டான்.இனியாவது உன் பட நடிகர்களை கஷ்டப்படுத்ததே அது எவ்வளவு கஷ்டம் எண்டு தெரியுதா என சிரித்தான் என்றார்.
சாணிக் காயிதம் தான் செல்வராகவன் நடிக்க ஒப்புக் கொண்ட முதல் படமாகும்.ஆனால் அதன் பிறகு நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் அவர் விஜய்யுடன் சேர்ந்து நடித்த பீஸ்ட் படம் முதலில் ரிலீஸாகிவிட்டது.
இயக்குநராக தன் தம்பி தனுஷை வைத்து நானே வருவேன் படத்தை இயக்கி முடித்திருக்கிறார் செல்வராகவன்.மேலும் அந்த படத்தில் வில்லனாகவும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.