வசீகரிக்கும் முக அழகிற்கு கண் இமை முடி மிகவும் அவசியமான ஒன்று. இந்த கண் இமை முடிகளுக்கு அடர்த்தியான மற்றும் ஆரோக்கியமான வளர்சிக்கு உதவும் சில அழகுக்குறிப்புக்களை இங்கே பார்ப்போம்.
தேங்காய் எண்ணெய், பாதாம் எண்ணெய், ஒலிவ் எண்ணெய் இம்மூன்றையும் சம அளவில் எடுத்து கலந்து கண் இமை முடிகளுக்கு பயன்படுத்தி வர இமை முடி மிகவும் அடர்த்தியாக மாறி வரும்.
அதேபோல் இரவில் தூங்குமுன் கற்றாழை ஜெல்லை கண் இமை முடிகளுக்கு தடவி பின்னர் காலை எழுந்து முகத்தை கழுவி விட வேண்டும். இவ்வாறு வாரத்தில் இரண்டு முறை செய்துவர நல்ல பலன் கிட்டும்.
அதேபோல 'ஷியா வெண்ணை' இது ஆப்பிரிக்காவில் அதிகம் காணப்படும் 'ஷியா' மரங்களில் இருந்து கிடைக்கும் பழங்களின் கொழுப்பே 'ஷியா வெண்ணை' எனப்படுகிறது. இந்த வெண்ணையினை முடிகளுக்கு பயன்படுத்துவதால் இமை முடிகளின் உதிர்வு குறைவடையும்.
அதேபோல விளக்கெண்ணெயில் இயற்கையாகவே கொழுப்பு அமிலங்கள் நிறைந்து காணப்படுகிறது. இந்த விளக்கெண்ணையினை இமை முடிகளுக்கு பூசுவதால் இமை முடிகள் அழகு பெறுகின்றன. அதேபோல கிரீன் டீ தூளினை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து பின்னர் அந்த நீரினை மட்டும் வடிகட்டி கண் இமைகளின் மீது பூசி வர அவை புத்துணர்ச்சி பெறுகின்றன.
அதேபோலவே ஒரு கப் ஒலிவ் எண்ணையில் ஒரு எலுமிச்சம் பழ தோலை ஓர் இரவு முழுவதும் ஊற வைக்கவும். பின்னர் இந்த எண்ணெயினை கண் இமை முடிகளுக்கு பயன்படுத்தி வர இமை முடியின் அடர்த்தி அதிகரிப்பதோடு இமையானது நீண்டும் வளரும்.
எனவே மேற்சொன்ன வழிமுறைகளை பின்பற்றி வசீகரிக்கும் இமை முடி அழகை பெற்றிடலாம்.