Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
06
இரும்புச்சத்து நிறைந்த கறிவேப்பிலை தொக்கு

Sooriyan FM Gossip - இரும்புச்சத்து நிறைந்த கறிவேப்பிலை தொக்குSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

701 Views
தினமும் கருவேப்பிலை சாப்பிட வேண்டும். 
இந்த கருவேப்பிலை தொக்கை சுடச்சுட சாதத்தில் போட்டு நல்லெண்ணெய் விட்டு பிசைந்து சாப்பிடலாம்.

முதலில் 3 கைப்பிடி அளவு பச்சை கறிவேப்பிலையை எடுத்து தண்ணீரில் போட்டு கழுவி சுத்தம் செய்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அதன் பின்பு ஒரு மிக்ஸியில் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். அதில் கழுவி வைத்திருக்கும் கருவேப்பிலை, சிறிய எலுமிச்சம்பழம் அளவு – புளி, மிளகு – 2 கரண்டி , மிளகாய் – 4, இந்த பொருட்களை எல்லாம் போட்டு கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி விழுது போல் அரைத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

இப்போது இதை தாளித்து விடலாம். அடுப்பில் அடி கனமான ஒரு கடாயை வைத்து கொண்டு 1 குழி கரண்டி அளவு நல்லெண்ணெய் ஊற்றிக் கொள்ளவேண்டும். நல்லெண்ணெய் காய்ந்ததும் கடுகு உளுந்து – 1 கரண்டி போட்டு தாளிக்கவும். உளுந்து சிவந்து வந்தவுடன் பெருங்காயம் – 1/2 கரண்டி சேர்த்து அடுப்பை அணைத்துவிடுங்கள்.

இந்த எண்ணெய் சூட்டிலேயே சீரகம் – 1/2 கரண்டி , மஞ்சள்தூள் – 1/2 கரண்டி , போட்டு பொரிய விட்டு, அதன் பின்பு மிக்ஸியில் அரைத்து வைத்திருக்கும் கருவேப்பிலை விழுதை கடாயில் இருக்கும் எண்ணெய் தாளிப்பில் ஊற்றி விட்டு அதன் பின்பு அடுப்பை மீண்டும் பற்ற வைத்து நன்றாக கலந்து விடுங்கள்.

இப்போது இந்தப் தொக்கிற்க்கு தேவையான அளவு – உப்பு, வெல்லம் – 1 கரண்டி சேர்த்து மீண்டும் தொக்கை கைவிடாமல் கலந்துவிட்டு கொண்டே இருக்க வேண்டும். இந்தத் தொகையானது சிவந்து உருண்டி திரண்டு நாம் ஊற்றிய எண்ணெய் எல்லாம் பிரிந்து வரும் போது அடுப்பை அணைத்து விடலாம். இந்த கருவேப்பிலை தொகை சூடு நன்றாக ஆறிய பின்பு ஒரு பாட்டிலில் ஸ்டோர் செய்து பிரிட்ஜில் வைத்தால் 15 நாட்கள் கெட்டுப் போகாமல் இருக்கும்.

இதுவே இந்த தொக்கை குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு கொடுக்க வேண்டும் என்றால் மேலே சொன்ன அளவுக்கு 15 பல் தோல் உரித்த பூண்டு பற்கள் தேவைப்படும். எண்ணெயில் கடுகு உளுந்து பொருட்களை போட்டு தாளிக்கின்றோம் அல்லவா, அப்போது இந்த பூண்டுகளையும் போட்டு லேசாக சிவக்க வைத்து தாளித்துக் கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

சாதாரணமாக சாப்பிடுபவர்களுக்கு பூண்டு பிடிக்கும் என்றாலும் பூண்டை நாம் சேர்த்துக் கொள்ளலாம்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top