தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான லோகேஷ் கனகராஜ் சமூக வலைத்தளத்தில் தனது அடுத்த திரைப்படம் பற்றிய பதிவினை தனது வாழ்வுடன் தொடர்புபடுத்தி பதிவிட்டுள்ளது வைரலாகி வருகிறது.
dமாநகரம் திரைப்படத்தில் அறிமுகமாகி பின்னர் கைதி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்கள் பட்டியலில் இடம்பிடித்தவர்தான் லோகேஷ் கனகராஜ். கைதி திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தளபதி விஜய்யை வைத்து மாஸ்டர் திரைப்படத்தை இயக்கியிருந்தார். இத்திரைப்படம் இரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இத்திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து கமலின் 232வது திரைப்படமான ‘விக்ரம்’ திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி முடித்துள்ளார். இத்திரைப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து ஜூன் 3ஆம் திகதி திரையரங்கில் வெளியாகவுள்ளது. 'ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷ்னல்' நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், அஞ்சாதே நரேன், காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். படத்தின் இசை மற்றும் டிரைலர் எதிர்வரும் 15ஆம் திகதி வெளியாகவுள்ளது.
இந்நிலையில் லோகேஷ் கனகராஜை கமல்ஹாசன் பாராட்டி உள்ளதாக சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இது குறித்து லோகேஷ் கனகராஜ் இவ்வாறு பதிவிட்டுள்ளார். எனது 36 வருட தவம். எனக்குள் இருக்கும் இயக்குனரை என் உலகநாயகன் கமல்ஹாசன் பாராட்ட” என்று பகிர்ந்துள்ளார். இந்த பதிவு சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.