Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
07
தெருவே மணக்கும் சுவையான அயிலை மீன் குழம்பு செய்வது பற்றிய சமையல் குறிப்பு..

Sooriyan FM Gossip - தெருவே மணக்கும் சுவையான அயிலை மீன் குழம்பு செய்வது பற்றிய சமையல் குறிப்பு..Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,275 Views
மீன் வகைகள் பல உண்டு. அவற்றில் முக்கிய இடத்தை மீன்குழம்பு  வகைகளும் மீன்  வறுவல்  வகைகளும் பிடிக்கிறது. அதிலும் அயிலை மீன் குழம்பு என்றால் அவ்வளவு சுவையானதாக இருக்கும். 
எனவே இன்றைய சமையல் குறிப்பு பகுதியில் சுவையான அயிலை குழம்பு செய்வது எப்படி என்பதை பற்றி பார்ப்போம். ஒவ்வொரு மீன் வகைகளிலும் அதிகளவு சத்துக்கள் உள்ளது. அதுவும் அயிலை மீன் என்றாலே தனி சுவை தான். இதனை செய்ய தேவையானவை.


அயிலை மீன்- கால் கிலோ

சின்ன வெங்காயம்- ஐம்பது கிராம்

தக்காளி- இரண்டு

புளி- சிறிதளவு

தேங்காய் துருவல்- கால் கப் (துருவியது) மிளகாய் தூள்- ஒரு தேக்கரண்டி

மல்லி தூள்- இரண்டு தேக்கரண்டி

மஞ்சள் தூள்- சிறிதளவு

பூண்டு- பத்து பல்

வறுத்த வெந்தயம்- ஒரு தேக்கரண்டி

சீரகம்- ஒரு தேக்கரண்டி

உப்பு- சிறிதளவு

நல்லெண்ணெய்- தேவையான அளவு

வெந்தயம்- அரை தேக்கரண்டி

கறிவேப்பிலை , கொத்தமல்லி இலை- தேவையான அளவு ஆகியனவாகும்.


அயிலை மீனை நன்றாக கழுவி வைத்துக்கொள்ளவும். பின்னர் புளியை ஊற வைத்துக்கொள்ளவும். பின் தக்காளி, வெங்காயம், பூண்டு, கொத்தமல்லி, கறிவேப்பிலை ஆகியவற்றை பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும். முன்னர் ஊற வைத்த புளி நன்றாக ஊறியதும் அதனை கெட்டியாக கரைத்து எடுத்து கொள்ளவும்.

மண் சட்டியில் ஒன்றில் தேவையான அளவு நல்லெண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் அதில் வெந்தயம், சீரகம் ஆகிய இரண்டையும் போட்டு வார்க்கவும். பின்னர் அதில் வெங்காயம் சேர்த்து அதனை பொன்னிறமாகும் வரை வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் அதனுடன் தக்காளி சேர்த்து குலையும் அளவிற்கு வதக்கவும். பின் அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், மல்லி தூள் என்பவற்றை போடவும். பச்சை வாடை போகும் வரை நன்றாக வதக்கவும். பின்னர் கரைத்து வைத்த புளி கரைசலை ஊற்றவும் .

அதன் பின் தேவையான அளவு தண்ணீர், உப்பு, சேர்த்து பத்து நிமிடங்கள் கொதிக்க விடவும். குழம்பு நன்றாக கொதித்த பிறகு விரால் துண்டுகளை போடவும். போடட பிறகு மிதமான சூட்டில் கொதிப்பு வரும் வரை வைக்கவும்.

கொதித்த பின் அரைத்து வைத்த தேங்காய் துருவலை ஊற்றி ஒரு சில நிமிடங்கள் கொதிக்க பிறகு இறக்கவும். இறக்கிய பிறகு கொத்தமல்லி தலையை தூவவும். இப்போது சுவையான அயிலை மீன் குழம்பு தயார்.

எனவே மேற்சொன்ன வழிமுறையை பின்பற்றி சுவையான அயிலை மீன் குழம்பினை சமைத்து உண்ணலாம்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top