லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் , விஜய் சேதுபதி ,பகத் பாசில் ஆகியோர் நடித்துள்ள திரைப்படம் விக்ரம். இந்த திரைப்படத்திரைக்கு அனிருத் இசை அமைத்துள்ளார்.
இந்த நிலையில் ஏற்கனவே அறிவித்த படி நேற்று விக்ரம்' திரைப்படத்தின் முதல் சிங்கிள் 'பத்தல பத்தல' பாடல் வெளியானது. பாடலை கமல் ஹாசன் வரியமைத்து பாடியுள்ளார்.

இது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
சமூக வலைத்தளங்களை அதிகமானோர் பாடலை பாராட்டியுள்ளது.