விஜய் சேதுபதியின் மகன் சூர்யா தற்பொழுது `Phoenix ' என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார்.சண்டைப் பயிற்சியாளர் அனல் அரசு இந்தத் திரைப்படத்தை இயக்கியுள்ளார்.இந்தத் திரைப்படத்தின் மூலம் அனல் அரசு இயக்குநராக அறிமுகமாகிறார்.திரைப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார்.
இந்தத் திரைப்படத்தில் சூர்யா குத்துச் சண்டை வீரராக நடிக்க மேலும் வரலட்சுமி சரத்குமார் மற்றும் ஹரிஷ் உத்தமன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
Action கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்தத் திரைப்படம் இரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்வரும் ஜுலை 4 ஆம் திகதி திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில் திரைப்படத்தின் Trailer தற்போது வெளியாகியுள்ளது.இந்த Trailer ஐ இயக்குநர் அட்லீயும் நடிகர் கார்த்தியும் தமது X தளத்தில் வெளியிட்டுள்ளனர்.