Super Star ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'கூலி' திரைப்படம் எதிர்வரும் August மாதம் 14ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இத் திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு இரசிகர்களிடையே நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அமெரிக்காவில் 'கூலி' திரைப்படத்தின் Premier காட்சிகளுக்கான முற்பதிவுகள் ஆரம்பிக்கப்பட்டு இதுவரை 500,000 அமெரிக்க டொலர்களை இத் திரைப்படம் வசூலித்துள்ளதாக உத்தியோகபூர்வத் தகவல் வெளியாகியுள்ளது.
'கூலி' திரைப்படம் வெளியாவதற்கு இன்னும் 16 நாட்கள் உள்ள நிலையில் மேலும் இந்த வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.