சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள ‘கூலி’ திரைப்படத்தின் Trailer வெளியாகி இரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்து வருகிறது.
ரஜினியின் 171 ஆவது திரைப்படமான இதில் சத்யராஜ், நாகர்ஜுனா, ஸ்ருதி ஹாசன், உபேந்திரா, சவுபின் சாஹிர் என பலர் நடித்துள்ளனர்.
ஹிந்தி நடிகர் அமிர்கான் கௌரவ வேடத்தில் நடித்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ள இத்திரைப்படம் ஓகஸ்ட் 14 ஆம் திகதி வெளியாகவுள்ளது.இந்நிலையில், 'கூலி' திரைப்படத்தின் இசை மற்றும் Trailer வெளியீட்டு விழாவில் 'கூலி' திரைப்படத்தின் Trailer வெளியிடப்பட்டது. இதனையடுத்து Youtube இல் வெளியான இத்திரைப்படத்தின் Trailer 10 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ளது.