நடிகர் சூர்யா தற்போது ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் 'கருப்பு' என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இன்னொரு பக்கம் தெலுங்கில் வெங்கி அட்லூரி இயக்கத்திலும் ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
சூர்யா சமீபத்தில் நடித்த 'கங்குவா' திரைப்படம் மாபெரும் தோல்வியைத் தழுவியது.
இத்திரைப்படம் வெளியாகி கிட்டத்தட்ட ஒரு வருடத்தை நெருங்கும் நிலையிலும், இன்னும் இத்திரைப்படத்தின் மீதான எதிர்மறை விமர்சனம் குறையவே இல்லை.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாகக் கண்டிப்பாகப் பெரிய வெற்றியை நடிகர் சூர்யா கொடுத்தே ஆக வேண்டும் என்பதுதான் சூர்யா இரசிகர்களின் மாபெரும் எதிர்பார்ப்பாக இருக்கிறது.