பல ஆண்டுகளாக மருத்துவர்களின் முக்கிய கருவியாக இருக்கும் ஸ்டெதெஸ்கோப்பிற்கு, இப்போது செயற்கை நுண்ணறிவுடன் கூடிய புதிய வடிவம் கிடைத்துள்ளது.
இங்கிலாந்தில் உள்ள ஆய்வாளர்கள் இந்த AI ஸ்டெதெஸ்கோப்பை உருவாக்கியுள்ளனர்.
இந்தக் கருவி, 15 வினாடிகளில் இருதய நோய்களை கண்டறியும் திறன் கொண்டது.
இருதய துடிப்பு மற்றும் இரத்த ஓட்டத்தில் உள்ள மிகச் சிறிய வேறுபாடுகளை கண்டறிந்து, இருதய செயலிழப்பு, குறைபாடு மற்றும் சாதாரண துடிப்புகளை கண்டறிய முடியும்.
இது, ECG (Electrocardiogram) பதிவையும் ஒரே நேரத்தில் எடுக்கிறது.
இது நோயாளியின் மார்பில் வைக்கப்படும்போது இருதயத்தின் மின்னழுத்த சிக்னல்களை பதிவு செய்கிறது.
அதே நேரத்தில், இரத்த ஓட்டத்தின் அளவை பதிவு செய்கிறது.
இந்தத் தரவுகள் cloud-ல் அனுப்பப்பட்டு, AI Algorithm மூலம் பகுப்பாய்வு செய்து பின்னர் முடிவுகளை ஸ்மார்ட்போனில் காண்பிக்கிறது.
இந்தக் கருவியின் மூலம் இருதய நோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிய முடியும் என்பதால், அதற்கான சிகிச்சையை விரைவாக ஆரம்பிக்கவும்
முடியும்.