அமீரின் இயக்கத்தில் 'யோகி' திரைப்படம் மூலம் இரசிகர்களிடையே பிரபலமாக அறியப்பட்டவர் நடிகர் யோகி பாபு. இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளைச் சேர்ந்த திரைப்படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து தனக்கென இரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார்.
இவர் நடித்த 'மண்டேலா' திரைப்படம் 2 தேசிய விருதுகளை பெற்றுள்ளது.
இந்த நிலையில் யோகி பாபுவின் 300 ஆவது திரைப்படமான 'அர்ஜுனன் பேர் பத்து' திரைப்படத்திற்கு D.இமான் இசையமைத்துள்ளார். இத் திரைப்படத்தின் 1st Look poster வெளியாகியுள்ளது. இப் போஸ்டரை விஜய் சேதுபதி வெளியிட்டு திரைப்படக்குழுவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.