ஐ.பி.எல் போட்டிக்கான ஏலத்தில் 7 பங்களாதேஷ் வீரர்கள் இடம்பெற்று இருந்தனர்.
இதில் வேகப்பந்து வீரர் முஷ்தபிசுர் ரஹ்மானை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இந்திய மதிப்பில் ரூ.9.2 கோடிக்கு ஒப்பந்தம் செய்தது.
பங்களாதேஷில் இந்துக்களுக்கு எதிராக தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்று வருவதால், ஐ.பி.எல். போட்டியில் முஷ்தபிசுர் விளையாட கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில்,முஸ்தபிசுர் ரஹ்மானை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று பி.சி.சி.ஐ கோரியது.
இந்த நிலையில் பி.சி.சி.ஐ-யின் உத்தரவை ஏற்று, முஸ்தபிசுர் ரஹ்மானை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி விடுவித்துள்ளது.
IPL-ல் இருந்து முஸ்தபிசுர் நீக்கப்பட்ட நிலையில், பங்களாதேஷ் விளையாட்டு அமைச்சக ஆலோசகர் ஆசிப் நஸ்ருல்,T20 உலகக் கிண்ணத்தில் பங்களாதேஷின் போட்டிகள் அனைத்தையும் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு மாற்ற வேண்டும்.
IPL போட்டிகளை பங்களாதேஷில் ஒளிபரப்பத் தடை விதிக்க வேண்டும். எந்த சூழ்நிலையிலும் பங்களாதேஷையோ எங்கள் வீரர்களையோ அவமதிப்பதை பொறுத்துக்கொள்ள மாட்டோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.