உலகின் முதல் நிலை பணக்காரரான மஸ்க்கின் நியூராலிங் நிறுவனம், மனித மூளைக்கும் கணினிக்கும் இடையிலான இன்டெர்ஃபேஸ் இணைப்பை உருவாக்கும் சிப்-களை உருவாக்கி வருகிறது.
இந்த சிப்-களை மனித மூளையில் பொருத்தி செயழிலந்த உடல் பாகங்களை மீண்டும் செயற்பாட்டுக்கு கொண்டு வரும் சோதனையை நியூராலிங் நிறுவனம் செய்து வருகிறது.
அண்மையில் மனிதர்கள் 12 பேருக்கு நியூராலிங் சிப் பொருத்தப்பட்டு இருப்பதாகவும் அவர்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டு இருப்பதாகவும் நியூராலிங் நிறுவனம் அறிவித்தது.
இந்நிலையில், மனித மூளையில் பொருத்தப்படும் நியூராலிங்க் சிப் உற்பத்தியை அதிகரிக்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.
அத்துடன் 2026 ம் ஆண்டில் தானியங்கி அறுவை சிகிச்சை முறையில் சிப்களை பொருத்தவும் பணிகளை மேற்கொண்டு வருவதாக குறித்த நிறுவனம் அறிவித்துள்ளது.