பி.ஜே.கிஷோர் தயாரிப்பில், ஜெய் அமர் சிங் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் ‘தி மம்மி ரிட்டர்ன்ஸ்’.
நகைச்சுவை கலந்த கதையுடன் உருவாக உள்ள திரைப்படத்தின் பணிகள் பூஜையுடன் தொடங்கியுள்ளன. இதில் கிருஷ்ணா, தேவதர்ஷினி, ஸ்வாதி, கின்ஸ்லி, லொள்ளு சபா மாறன் உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளார்கள்.
பல வருட கோமாவில் இருந்து மீண்டு வரும் தன் தாயை காப்பாற்ற தன் அம்மா வாழ்ந்த 1990களின் உலகை தன் நண்பர்களுடன் இணைந்து உருவாக்குகிறான் மகன். அதில் நடக்கும் களேபரங்கள் தான் இத்திரைப்படத்தின் மையம். மேலும் திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெறவுள்ளதாகவும் இயக்குநர் ஜெய் அமர் சிங் தெரிவித்துள்ளார்.