Google, புதிய TranslateGemma எனும் Open Translate அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இவை 55 மொழிகள் மற்றும் 4B, 12B, 27B Parameters என மூன்று அளவுகளில் கிடைக்கின்றன.
இவை, Gemini உருவாக்கிய தரவுகள் மற்றும் மனித மொழிபெயர்ப்புகளின் கலவையை அடிப்படையாகக் கொண்டு பயிற்சியளிக்கப்பட்டுள்ளன.
12B மொடல், Google-ன் 27B baseline-ஐ விட குறைந்த computing power-இல் அதிக செயல்திறன் வழங்குகிறது.
இதனால், லேப்டாப்பில் cloud API-களைப் பயன்படுத்தாமல் நேரடியாக தரமான மொழிபெயர்ப்பு செய்ய முடியும்.
அதேபோல், 4B மொடல் ஸ்மார்ட்போன்களில் இயங்கக்கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
TranslateGemma, multimodal திறன்களையும் கொண்டுள்ளது. இதன் மூலம், படங்களுக்குள் உள்ள உரைகளை மொழிபெயர்க்கும் வசதி கிடைக்கிறது.
TranslateGemma, AI அடிப்படையிலான மொழிபெயர்ப்பில் புதிய தரத்தை அமைத்து, உலகளாவிய மொழி தடைகளை குறைக்கும் முக்கிய முன்னேற்றமாக இந்த அம்சம் பார்க்கப்படுகிறது.