டி20 உலகக்கிண்ண தொடர் இலங்கை மற்றும் இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதில் இன்று இத்தாலி மற்றும் ஸ்கொட்லாந்து அணிகள் மோதின. இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இத்தாலி அணி பந்து வீச்சை தெரிவு செய்தது.
அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய ஸ்கொட்லாந்து அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 207 ஓட்டங்களைக் குவித்தது.
208 எனும் வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இத்தாலி அணி 16.4 ஓவர்களில் 134 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் ஸ்கொட்லாந்து அணி 73 ஒட்டங்களால் அபார வெற்றி பெற்றது.
முன்னதாக இத்தாலி வீரர் பென் மனென்டி 31 பந்துகளில் 52 ஓட்டங்களை விளாசினர். இதன்மூலம் டி20 உலகக்கிண்ணத்தில் அரை சதம் அடித்த முதல் இத்தாலி வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.