T.ராஜேந்திரனுடைய திரை வாழ்க்கையில் அவருக்கே உரித்தான தனி அடையாளத்தைக் கொடுத்த திரைப்படம்தான் 'உயிருள்ளவரை உஷா'.
கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இசை, இயக்கம், நடிப்பு என தனது அத்தனை திறமைகளையும் 'உயிருள்ளவரை உஷா' திரைப்படத்தில் வெளிப்படுத்தியிருப்பார் T.ராஜேந்தர்.
தற்போது இத்திரைப்படம் 43 வருடங்களுக்குப் பின் காதலர் தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 13ஆம் திகதி திரையரங்குகளில் Re-Release செய்யப்படவுள்ளது.
எண்பதுகளில் தன்னை உயர்ந்த நிலைக்குக் கொண்டு சென்ற 'உயிருள்ளவரை உஷா' திரைப்படம், தற்போதைய இளம் தலைமுறையினரைக் கவரும் திரைப்படமாக அமையும் என T.ராஜேந்தர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.