இயக்குநர் கணேஷ் சந்திரா இயக்கத்தில் விஜய் ஆண்டனி தயாரிப்பில் அஜய் தீஷன் 'பூக்கி' திரைப்படத்தில் நடிக்கின்றார்.
2K தலைமுறை காதலர்களின் Relationship பிரச்சனைகளை மையமாக வைத்து நகைச்சுவை மற்றும் பரபரப்பான திரைக்கதையில் இத் திரைப்படம் உருவாகி உள்ளது. இத் திரைப்படத்தில் தனுஷா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் பாண்டியராஜன், சுனில், இந்துமதி மணிகண்டன், விவேக் பிரசன்னா, பிளாக் பாண்டி, ஆதித்யா கதிர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
விஜய் ஆண்டனி வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இத் திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் நாளை வெளியாகவுள்ள நிலையில் இத் திரைப்படத்தின் Trailer நேற்று வெளியாகியுள்ளது.