கமல் தயாரிப்பில் ரஜினி தனது 173-வது திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த திரைப்படத்தை டான் பட இயக்குநரான சிபி சக்கரவர்த்தி இயக்க இருக்கிறார்.
இந்த திரைப்படத்தை தொடர்ந்து ரஜினி-கமல் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம் குறித்து வெளியாகியுள்ள தகவல் ரஜினி, கமல் இரசிகர்களை மேலும் உற்சாகப்படுத்தி உள்ளது.
இருவரும் சேர்ந்து நடிக்கும் இத்திரைப்படத்தின் புரோமோ படப்பிடிப்பு சென்னையில் சில தினங்களுக்கு முன்பு நடந்தது.
இத்திரைப்படத்தில் ரஜினிக்கும், கமலுக்கும் சம்பளம் இல்லாமல் இலாபத்தில் பங்கு என்ற முறையில் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.