டி20 உலகக்கிண்ண தொடரின் சூப்பர் 8 சுற்றில் சென்னையில் நேற்று நடைபெற்ற போட்டியில் இந்தியா- சிம்பாப்வே அணிகள் மோதின.
இந்த போட்டியில் இந்திய அணி 72 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங், டி20 உலகக்கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் இந்தியாவுக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற வரலாற்றுச் சாதனையை படைத்துள்ளார்.
சிம்பாப்வேவுக்கு எதிரான போட்டியில் 3 விக்கெட்டுகளை கைப்பற்றியதன் மூலம் அர்ஷ்தீப் சிங் இந்த மைல்கல்லை எட்டினார். இதன் மூலம் அவர் ஜஸ்பிரித் பும்ராவின் முந்தைய சாதனையை முறியடித்துள்ளார்.
அர்ஷ்தீப் சிங் தற்போது 35 விக்கெட்டுகளுடன் முதலிடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.