சுயாதீன இசைக்கலைஞர் சாய் அபயங்கர், "கட்சி சேர", "ஆச கூட" போன்ற Album பாடல்கள் மூலம் புகழ் பெற்றார். இந்த பாடல்கள் பெரும் வரவேற்பை பெற்றதையடுத்து, திரைப்படங்களில் இசையமைக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. அவருடைய இசையமைப்பில் முதல் திரைப்படமாக 'Dude' வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.
அதனைத் தொடர்ந்து 'கருப்பு', 'மார்ஷல்' போன்ற திரைப்படங்களுக்கு இசையமைப்பதோடு அட்லி, பாலாஜி தரணீதரன், விஜய் சேதுபதி , தனுஷ் ஆகியோரின் திரைப்படங்களுக்கும் இசையமைப்பாளராக ஒப்பந்தமாகி இருக்கிறார் சாய் அபயங்கர். இந்த நிலையில், சாய் அபயங்கர் தனது அடுத்த பாடலை வெளியிட்டுள்ளார். "பவழ மல்லி" என தலைப்பிடப்பட்டுள்ள இந்த பாடலை விவேக் எழுத, சுருதி ஹாசன் பாடியுள்ளார்.