கோச்சடையான் வெளியான பின்பு பல பிரபலங்கள் படம் தொடர்பில் கருத்து வெளியிட்டனர், அந்த வகையில் சிம்பு தனது டுவிட்டர் தளத்தில் படத்தின் கிராபிக்ஸ் சரியாக அமையவில்லை என பதிவேற்றியுள்ளார். அதற்கு சௌந்தரியா சற்றும் கோபப்படாமல் 'நன்றி' சொல்லியிருந்தார்.
அடடா என்ன இது இப்படியொரு விஷயம் சப்பென்று முடிந்ததே என்று யோசித்துக்கொண்டிருக்க, சந்தர்ப்பம் பார்த்து சிம்புவுக்கு பதில் அட்டாக் கொடுத்திருக்கிறார் ரஜினி புதல்வி.
சமீபத்தில் நடைபெற்ற தென்னிந்திய தொலைகாட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டிருந்த சௌந்தர்யாவிடம் 'ஐந்து பேரிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை கேட்கலாம் என்று கேட்க.....
உடனே சௌந்தர்யா 'நான் சிம்புவிடம் தயவுசெய்து பாடாதீர்கள்' என கேட்டுக்கொள்கிறேன் என்று சொல்லியுள்ளார்.
இது சிம்புவை பழிவாங்குவதற்காக செய்த ஒரு செயல் எனவும் இதனால் சிம்பு மிகவும் மனவருத்தப்பட்டார் என சினி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சும்மாவே சிம்பு அந்த மாதிரி.. இப்ப இந்தப் பொண்ணு வேற கிண்டி விட்டிருக்கு.
"எவண்டி உன்னைப் பெத்தான்" ரக பாடல் ஏதாவது பாடிக்கீடி ரஜினியையும் வதைக்கப் போறார் வம்பு.. இல்லை சிம்பு.