Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

கார்த்தியின் நடிப்பில், மிகவிரைவில் வரவுள்ள திரைப்படம் கொம்பன். லட்சுமிமேனன் மற்றும் ராஜ்கிரண், கோவை சரளா இன்னும் பல நட்சத்திரங்களும் இணைந்து கலக்கியிருக்கும் படமிது.

இந்நிலையில், இப்படத்தையடுத்து நாகர்ஜூனாவுடன் இணைந்து தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகும் படத்தில் கார்த்தி நடித்து வருகிறார். இப்படத்தின் பூஜை சமீபத்தில் போடப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடிக்க ஸ்ருதி ஹாசன் ஒப்பந்தமாகியிருந்தார்.
ஆனாலும், தற்போது ஸ்ருதி ஹாசன் இப்படத்தில் இருந்து விலகியிருக்கிறார். என்னாச்சும்மா என்று, நாமெல்லாம் கேட்கும் போது அம்மணியின் பதில் இந்தப் படத்தில் நடிக்க திகதியில்லை.

ஸ்ருதிஹாசன் தற்போது விஜய்யுடன் இணைந்து ‘புலி’ படத்திலும், மகேஷ் பாபுவுடன் இணைந்து தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறார். இதை தவிர சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித்துடன் ஜோடி சேர்ந்து நடிக்கவும் ஒப்பந்தமாகியிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்ககது.

-கோடம்பாக்கக் குருவி-
314 Views
கோடம்பாக்கத்தின் இளம் இசையமைப்பாளர்களின் வரிசையில், முக்கியமான வகிபாவம் கொண்டவர் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார். இவர் இசையமைப்பது ஒரு பக்கம் என்றாலும், படங்களில் நாயகனாகவும் மறுபக்கம் தனது பணியை செவ்வனே செய்து வருகிறார்.

இந்நிலையில், இவர் தற்போது த்ரிஷா இல்லைன்னா நயன்தாரா படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இடம்பெறும் ஒரு பாடல் காட்சிக்கு ஏதாவது புதுமை செய்ய வேண்டுமென எண்ணியவர்கள், இந்தப் பாடலுக்கு நம்ம 70, 80களில் கலக்கிய ஹீரோக்களின் சாயலில் பாடலை எடுக்கவுள்ளார்கள்.

ஜி.வியும் நாயகி மனிஷாவும் பாடல் காட்சியில், இடைக்கால நாயக நாயகிகளின் தோற்றத்தில் வருகிறார்கள். அத்தோடு, பாரதிராஜாவின் படங்களில் வந்த சில காட்சிகளும் இப்பாடல் காட்சியில் இடம்பிடித்துல்லாதவும் கூறப்படுகிறது.

-கோடம்பாக்கக் குருவி-
400 Views
டுபாய் விமான நிலையத்தில் தனது வைர மோதிரத்தைத் தவற விட்டாராம் பிரியங்கா சோப்ரா. போலீசில் புகார் கொடுத்தும் பயனில்லை என்கிறார்.

ஷாருக்கான் தனக்கு பிடித்த ஹீரோ என கூறும் அக்ஷரா ஹாசன், தீபிகா படுகோனேவை தனது கனவு நாயகி என புகழ்கிறார்.

கனடாவில் கடும் பனிப்பொழிவால் அஜய் தேவ்கனின் 'ஷிவே' படக்குழு மும்பை திரும்பி விட்டது.

ஒரு வாரமாக கடும் காய்ச்சலில் அவதிப்பட்ட கேத்ரினாவை திடீரென பார்த்து உடல் நலம் விசாரித்தார் முன்னாள் காதலன் சல்மான் கான்.

நடிப்புக்கு முழுக்குப் போட்டு அமிதாப் ஓய்வெடுக்க வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளார் ராம்கோபால் வர்மா.

திரிஷ்யம்' ரீமேக்கில் அஜய் தேவ்கன் நடிக்கிறார். போலீஸ் அதிகாரி வேடத்தை தபு ஏற்கிறார்.

இனி மாதந்தோறும் தனது ரசிகர்களைச் சந்தித்துப்பேச முடிவு செய்திருக்கிறார் ஷாருக்கான்.

இந்த ஆண்டில் 2 மாதங்களில் ஹிந்திப் படங்களின் தொடர் தோல்வியால் தயாரிப்பாளர்கள், கவலையில் உள்ளனர்.

காதலனை திருமணம் செய்த பாடகி ஷ்ரேயா கோஷல் தம்பதிக்கு, ஷ்ரேயாவின் தோழி பிரீத்தி ஜிந்தா தனது வீட்டில் விருந்து கொடுத்தாராம்.

-கோடம்பாக்கக் குருவி-
293 Views
ஆட்டோகிராஃப், திருப்பாச்சி உள்பட பல படங்களில் நடித்த மல்லிகா குறுகிய காலத்தில் தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் நடித்தார். அதே வேகத்தில் அவரது நடிப்பு வாழ்க்கை முடிவுக்கு வந்து சொந்த மாநிலமான கேரளாவில் செட்டிலாகிவிட்டார்.
 

 மலையாளத்தில் நடிகையாக குறிப்பிடத்தகுந்த இடத்தை பிடிக்க முடியவில்லை என்ற ஆதங்கம் அவருக்கு உள்ளது. விரைவில் மல்லிகா இயக்குனராகிறார் என்பதே சமீபத்திய செய்தி.
 

கதாசிரியர் கல்லூர் டென்னிஸ் எழுதிய, பழனியிலே கனகம் என்ற கதையைதான் அவர் படமாக்குகிறார். யமுனா தேவி என்ற சினிமா நடிகைக்கு டூப்பாக படங்களில் பயன்படுத்தப்படுகிறவர், கனகம்.

அந்த கனகத்தை இந்த உலகம் ஒரு செக்ஸ் உபகரணமாகதான் பார்க்கிறது. அவளது மனவோட்டாம்தான் படத்தின் அடிநாதம்.
 
யமுனா தேவியாக பாவனாவும், கனகமாக மல்லிகாவும் நடிக்கின்றனர். படத்தை மல்லிகாவே இயக்குகிறார். கனகமாக நடிக்க யாரும் முன்வராததால் நானே அந்த வேடத்தை செய்வது என்று முடிவு செய்தேன் என்கிறார் மல்லிகா.

மல்லிகாவுக்கு இயக்குனர் தொப்பி பொருந்துகிறதா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

====== CASTRO RAHUL =======
437 Views

ரஜினியின் அடுத்த படம் யாருக்கு... அடுத்து அவர் நடிக்கப் போவது ஆக்ஷன் படமா? காமெடிப் படமா என்றெல்லா்ம் விவாதங்கள் ஓடிக் கொண்டிருக்கின்றன.

ஆனால் சூப்பர் ஸ்டாரோ அமைதியாக, கிரேசி மோகனைச் சந்தித்து காமெடியாக ஒரு கதை தயார் பண்ணுங்கள் என்று கூறியிருப்பதாக கோலிவுட்டில் பரபரப்பு பேச்சு கிளம்பியுள்ளது.

‘தில்லுமுல்லு', ‘தம்பிக்கு எந்த ஊரு', ‘குரு சிஷ்யன்', சந்திரமுகி உள்ளிட்ட படங்கள் ரஜினியை அனைத்து தரப்பினரிடமும் கொண்டு போயின . குறிப்பாக குழந்தைகள்.


சமீபத்திய அவரது படங்கள் அனைத்தும் ‘சீரியஸ் டைப் படங்களாகவே அமைந்தன. ‘சிவாஜி', ‘எந்திரன்', ‘கோச்சடையான்', ‘லிங்கா' போன்ற வகை கதைகளைத் தவிர்த்து, முழுக்க முழுக்க காமெடியாக இந்தக் கதை அமைய வேண்டும் என்பது ரஜினியின் விருப்பமாம்.

கமலின் ஆஸ்தான எழுத்தாளர் என்றாலும், ரஜினிக்குப் புதியவரல்ல கிரேஸி. ஏற்கெனவே ரஜினியின் அருணாச்சலத்துக்கு வசனம் எழுதியுள்ளார்.

அருணாச்சலம் 200 நாட்களுக்கு மேல் ஓடி வசூல் சாதனை புரிந்த படமாகும்.


========= CASTRO RAHUL =========
460 Views
ஹிந்தியில் முன்னணியிலும் அத்தோடு பல இதயங்களையும் இரசிகர்களையும் கவர்ந்துள்ள இளமைமையான நடிகர் ஷாகித் கபூர். இஸ்க் விஸ்க் திரைப்படத்தின் மூலம், சினிமாவில் அறிமுகமானவர் இவர். அறிமோகமான முதல் படத்திலேயே சிறந்த இளம் நடிகருக்கான ஃபிலிம்ஃபேர் விருதையும் பெற்றுக் கொண்டவர் ஷாகித்.

பின்னர் பல திரைப்படங்களில் உச்சத்துக்கு வந்தவர். அண்மையில் கூட இவர் நடிப்பில் வெளியான ஹைதர் படத்துக்கும் ஃபிலிம்ஃபேர் விருதை சூடிக்கொண்டார் என்பதும் முக்கியமானது.

இந்நிலையில், சாஹித்துக்கு எப்போது திருமனமென பலரும் கேட்டு நச்சரித்து வரும் நிலையில், முதன்முறையாக தனது திருமணம் தொடர்பாக வாய் திறந்துள்ளார் சாஹித். டெல்லியைச் சேர்ந்த மீரா ராஜ்புத் என்னும் மங்கையை விரைவில் மணக்க உள்ளார். எதிர்வரும் டிசம்பரில் இரு தரப்பும் இணைந்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்கள். ஆனாலும், திருமண திகதி பற்றி ஷாகித் வாய் திறக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
எப்பிடி ஆடினாலும், மாட்டித்தான் தம்பி ஆகணும் !!

-கோடம்பாக்கக் குருவி-
371 Views
சுசீந்திரன் இயக்கத்தில் விஷால் நடிக்கும் புதிய படத்துக்கு 'பாயும் புலி' என்று பெயரிட்டுள்ளார்கள். பரபரப்பான பெயராக படம் இருக்க வேண்டும் என்பதற்காகத் தான் இந்த பெயராம்.
அட ராமா!!

பாண்டிய நாடு வெற்றிக் கூட்டணி சுசீந்திரனும், விஷாலும் மீண்டும் இந்தப் படத்தில் இணைந்துள்ளனர். பல மடங்கு வெற்றிகளை இந்தப்படத்திலும் வழங்க வேண்டும் என்பது இவர்களது திடசங்கற்பம்.

இதில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் விஷால். விஷாலுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். சமுத்திரக்கனி விஷாலுக்கு மூத்த சகோதரராக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்பதும் முக்கியமானது. அத்தோடு பெங்களூரைச் சேர்ந்த புதுமுகம் வில்லனாக நடிக்கிறார். சூரி மற்றும் ஆனந்தராஜ் ஆகிய இருவரும் முக்கியமான பாத்திரங்களாக பளீரிட உள்ளார்கள். டி.இமான் இசையமைக்கும் இத்திரைப்படத்துக்கு இன்னும் எதிர்பார்ப்பலைகள் அதிகரித்துள்ளன.

போற போக்குல, இன்னும் நல்ல நல்ல படத் தலைப்புகளும் வரும் போல !

-கோடம்பாக்கக் குருவி-
330 Views
வருத்தப் படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தை தொடர்ந்து சிவ கார்த்திகேயனுடன் இயக்குனர் பொன் ராம் இணையும் "ரஜினி முருகன்" இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளதாக அறிவித்துள்ளார் இயக்குனர்.

சிவ கார்த்திகேயன் ரசிகர்கள் பலரின் எதிர் பார்ப்புக்கு பதில் வழங்கியுள்ளார் பொன் ராம் தனது டுவிட்டர் பக்கத்தில்.அதன் படி அதன் பெஸ்ட் லுக் அடுத்த மாதம் 25ம் திகதியும், திரைப்படத்தின் இசை வெளியீட்டை ஜூன் 7ம் திகதியும் இறுதி செய்துள்ளனர்.

திரைப்படம் எப்போது வெளி வரும் என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள பொன் ராம் எதிர்வரும் ரமலான் தினத்தன்று வெளியிட தீர்மானித்துள்ளோம் எனவும் பதில் வழங்கியுள்ளார்.
இமான் இசையமைக்க கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக கலக்குகிறார்.

-ஊரோடி-
325 Views
அமரகாவியம் திரைப்படத்தின் பின்னர் "இன்று நேற்று நாளை"திரைப்படத்தில் நடிகர் விஷ்ணுவுடன் இணைந்து நெஞ்சங்களை கட்டி போட்ட மியா மற்றும் அட்டகத்தி தினேஷ் ஆகியோரின் இணைவில் "ஒரு நாள் கூத்து"என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு, இம்மாதம் 30 ம் திகதி சென்னையில் ஆரம்பமாகின்றது.

முதல் தடவையாக நெல்சன் என்ற புதுமுக இயக்குனர் படத்தை இயக்க, "பண்ணையாரும் பத்மினியும்"படத்துக்கு இசை வழங்கிய ஜஸ்டின் இசை மழை பொழிய தாயாரகின்றார். மியா வுக்கு கிராமத்து பெண் வேடம் கிடைத்திருகின்றது. மண் வாசம் வீசும் கதைக் கருவை ஒரு நாள் கூத்து கொண்டிருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவிலேயே எல்லா படப்பிடிப்பையும் நடாத்தி முடிக்கவும் தீர்மானித்துள்ளதாக கூறபடுகின்றது.

-ஊர்கூடி-
271 Views
நம்ம தமிழ் நடிகர் என்று பெருமையோடு பேசிக்கொள்ளும் அளவுக்கு முன்னேறிய நடிகர் தனுஷுக்கு இப்பொழுது தமிழில் வாய்ப்புக்கள் கொட்டுவது மாத்திரமின்றி, ஹிந்தியிலும் குவிகிறது. அவரது நடிப்பை ஹிந்தி உலகமும் இரசித்துப் பாராட்டுகிறார்கள். அவரையே பல படங்களில் நடிக்க வைக்க விரும்புகிறார்கள்.

இந்நிலையில், 2013இல் வந்த ரான்ச்சனா படத்தின் மூலமாகத்தான், ஹிந்தியில் அறிமுகமானார் தனுஷ். அந்தப் படத்தில் நடிகை சோனம் கபூர் ஜோடியாக நடித்திருந்தார். படமும் பலரின் பாராட்டுகளைப் பெற்றதாக மாறியுள்ளது. இப்பொழுது, இரண்டு தமிழ் படங்களில் நடித்து வருகிறார். அந்தப் படங்களை முடித்து விட்டு, இந்திப் படங்களில் நடிக்க ஆயத்தமாகியுள்ளார் தனுஷ்.

அதற்க்கு இன்னும் இலகுவாக இருப்பதற்காக, மும்பையில் வீடும் வாங்கியுள்ளார் தனுஷ். இரண்டு மொழிகளிலும் கலந்து இனி நடிப்பில் கவனம் செலுத்தவுள்ளதாக சொல்லியுள்ளார்.

-கோடம்பாக்கக் குருவி-
552 Views
நாளை இந்திய ஆஸ்திரேலிய உலக கிண்ண யுத்தம் இடம்பெற உள்ள நிலையில், இந்திய பிரபல நடிகையும் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் விராட் கோஹ்லியின் காதலியுமான அனுஷ்கா சர்மா நாளைய போட்டி நடைபெற உள்ள சிட்னி நகருக்கு பறந்துள்ளார்.

இந்திய முக்கிய பிரபலங்கள் முதல் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் பலர் இப்போது சிட்னியில் ஆசனமிட்டிருக்கும் நிலையில், அனுஷ்கா சர்மாவின் பயணம் தான் அதிகளவாக பேசப்படுகிறது.

இதுவரைக்குமான போட்டிகளில் கோஹ்லியின் அதிரடியை போதுமான அளவு காண கிடைக்கவில்லை என்று தவிக்கும் ரசிகர்கள் ,அனுஷ்காவை கண்டதும் கோஹ்லி சூடாகிடுவர். நாளைய போட்டியில் சிறப்பாக விளையாடுவர் என்றும் ஆசைப் படுகிறார்கள்.

நாளைய போட்டியில் கோஹ்லியை மட்டுமல்லாமல் இந்திய வீரர்கள் அனைவரையும் உற்சாக படுத்த போகிறார் அனுஷ்கா சர்மா.

-ஊர்காவி-
625 Views
தென்னிந்திய சினிமாவில் தொடர்ந்து 10 வருடங்களுக்கு மேல் முன்னணியில் இருக்கும் நாயகி நடிகை நம்ம த்ரிஷா தான். இவருக்கு போட்டியான நடிகை இவரேதான் எனலாம். அந்தளவுக்கு இன்னும் அழகோடு மிளிரும் நடிகை அம்மணி.

இவர் அண்மையில் வழங்கிய நேர்காணல் ஒன்றில், தன்னுடன் நடித்த அனைத்து நடிகர்களை பற்றியும் மனம் திறந்துள்ளார். இதில் முக்கியமாக நடிகர் விஜய் பற்றி குறிப்பிடுகையில், ‘விஜய்யின் சண்டைக்காட்சிகள், வசம் பேசுகின்ற பாவனை, நடனம் என்பன என்னை மிகவும் கவர்ந்தவை , அவரிடம் இருந்து நிறைய நல்ல விஷயங்களை கற்று கொண்டேன்’ என்றுள்ளார்.
அத்தோடு அடிப்படையில் திரிஷா ஒரு அஜித் ரசிகை என்றாலும், விஜயின் நடிப்பை இரசிப்பது பற்றி மட்டுமே இந்த சந்தர்ப்பத்தில் கூறியுள்ளார்.

அத்தோடு, தமிழ் சினிமாவில் அனைவருடனும் போட்டி போட்டு நடிக்கும் ஒரு நடிகையும் த்ரிஷா என்று சொல்லலாம். , த்ரிஷா, விஜய்யுடன் ‘திருப்பாச்சி, கில்லி, ஆதி, குருவி ஆகிய படங்களில் ஜோடியாக நடித்தார் என்பதும் உங்களுக்கு நினைவிருக்கலாம்.

-கோடம்பாக்கக் குருவி-
361 Views
ஸ்ரீகாந்த் & ராய் லட்சுமி நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் சௌகார்பேட்டை. இதுவும் மர்ம திகில் திரைப்படங்களின் வரிசையில் வந்து கலக்கவுள்ள திரைப்படமென எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

ஸ்ரீகாந்துக்கும் ராய் லட்சுமிக்கும் நடிப்பில் நல்ல பெயரையும், எதிர்காலத்தில் இன்னும் அதிக வாய்ப்புக்களையும் பெற்றுக்கொடுக்கப் போகும் திரைப்படம் இதுவென சொல்லப்படுகிறது.

சௌகார்பேட்டை திரைப்பட புகைப்பட தொகுப்பு வெளியாகியுள்ளது. எனவே, முழுமையாக பார்வையிட சூரியனின் முகநூல் பக்கம் செல்லுங்கள்

-கோடம்பாக்கக் குருவி-


321 Views
இந்திய மத்திய அரசின் சினிமாத் துறைக்கான கௌரவமாக கருதப்படும், தேசிய விருதுகள் நேற்றைய தினம் வழங்கி வைக்கப்பட்டன. தமிழில் சிறந்த நடிகராக பாபி சிம்ஹா தெரிவு செய்யப்பட்டுள்ளார். அந்த பெயர் விபரங்களையும் நேற்று சூரியனின் இணையத்தில் தந்திருந்தோம். படித்திருப்பீர்கள், அறிந்திருப்பீர்கள்.

இப்பொழுது இன்னுமொரு கௌரவத்தை நடிகரும் இயக்குனரும் தயாரிப்பாளருமான மனோபாலா, பாபி சிம்ஹாவுக்கு வழங்கியுள்ளார். அதாவது பாம்புச்சட்டை எனும் படத்தில் பாபி சிம்ஹா நடித்து வருகிறார். இந்தப் படத்தை சரத்குமார் மற்றும் ராதிகா ரசத்குமார் மற்றும் மனோபாலாவின் நிறுவனங்களே இணைந்து தயாரித்து வருகின்றன.

இந்தப் படத்தில் சிறப்பாக பாபி நடித்து வருவதாகவும், அவரது நடிப்பால் ஈர்க்கப்பட்ட சாதாரண இரசிகன் நான் எனவும், மகிழ்ச்சி தெரிவித்த மனோபாலா, மிகப்பெரிய மாலை ஒன்றை அணிவித்து தனது சந்தோசத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

-கோடம்பாக்கக் குருவி-
287 Views
அஜித் விஜய் பற்றி பேசுவதென்றால், ஆஹா ஓஹோ என பேசிக்கொள்ளும் நம்ம இரசிகர்கள், அதே அளவுக்கு அகோரமாக சண்டையிட்டும் வார்த்தைகளால் மோதிக்கொண்டும் தமது எதிர்ப்புக்களையும் வெளிப்படுத்திக் கொள்வார்கள். இது தெரிந்ததே!

இந்நிலையில், எதிர்வரும் சித்திரைப் புத்தாண்டுக்கு அஜித் விஜய் படங்கள் தொடர்பான ஆரம்ப அம்சங்கள் வெளியாகி, இரசிகர்களுக்கு விருந்தளிக்கவுள்ளன. அதுவும் நிறைய நாட்களுக்குப் பின்னர், இவர்கள் இருவரின் படங்களும் ஒன்றாக வரவுள்ளன என எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய் நடித்து வரும் புலி, கேரளாவில் நடைபெற்று வருகிறது. மிக வேகமாக நடைபெற்று வரும் படப்பிடிப்புக்கள் 60சதவீதம் நிறைவடைந்துள்ளன. அதேபோல, படத்தின் முதல் லுக் சித்திரைப் புத்தாண்டு அன்று வெளியாகவுள்ளது.

அஜித்தின் படமும், மிக வேகமாக வளர்ந்து வருகிறது. இதே போலவே தல 56 பட ஆரம்ப விழாவும் இதே புத்தாண்டு தினத்தில் தான் நடைபெறவுள்ளது என படக்குழு அறிவித்துள்ளது.

எனவே, இரு பெரிய நட்சத்திரங்களும் தமிழ் புத்தாண்டு அன்று தமது படங்களுக்கான, நல்ல ஆரம்பத்தை ஏற்படுத்த ஆயத்தமாகியுள்ளன என்பது இரசிகர்களுக்கும் கொண்டாட்டம்தான்!

-கோடம்பாக்கக் குருவி-
335 Views
[1]      «      1835   |   1836   |   1837      »      [1879]




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top