Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
07
இளநரைக்கு வைப்போம் முற்றுப்புள்ளி. அழகுக்குறிப்பு ..

Sooriyan FM Gossip - இளநரைக்கு வைப்போம் முற்றுப்புள்ளி. அழகுக்குறிப்பு ..Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

936 Views
முன்கூட்டிய நரைமுடி என்பது இன்று பலரும் எதிர்நோக்கும் ஓர் பிரச்சினை தான். சிலருக்கு இது இள வயதினிலே ஒன்று இரண்டாக ஆரம்பித்து பின்னர் தலை முழுவதுமாக நரை முடி வந்துவிடுகிறது. 
எனினும் இளவயதில் நரை முடி என்பது பலருக்கும் மன உளைச்சலை ஏற்படுத்தும் விடயமாகும். இதற்கு என்ன தீர்வு என்பதை இன்றைய அழகுக்குறிப்பு பகுதியில் பார்ப்போம். இளநரை ஏற்பட ஆரம்பிக்கும் பொழுதே போது கவனம் எடுக்கவேண்டும். ஏனெனில் முன்கூட்டிய நரை ஏற்படுதல் என்பது மரபணுவுடன் தொடர்புபட்டது.

பெரும்பாலும் இவர்களுக்கு முப்பது வயதிற்குள் இள நரை ஏற்பட ஆரம்பித்துவிடுகிறது. அழகு என்ற விடயத்திலும் சரி ஆரோக்கியம் என்ற விடயத்திலும் சரி மரபணுக்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. முடி தொடர்பான பிரச்சினைகளை சமாளிக்க எப்போதும் வாழ்க்கை முறை மற்றும் உணவு முறை சீராக இருக்க வேண்டும்.

தாதுக்கள் மற்றும் புரதங்களை கொண்ட உணவுகள் 'மெலனின் நிறமிகளை' அதிகரிக்க உதவுகின்றன. இது முடி நரைப்பதை தடுக்க உதவுகிறது. 'மெலனின்' நிறைந்த சில பொருட்களில் அயோடின் இஞ்சி, தேன் மற்றும் இரும்பு சத்துக்கள் அடங்கும். நரைத்தலின் ஆரம்ப அறிகுறிகளை தடுக்க உணவில் விற்றமின் பி 12 நிறைந்த உணவுகளை சேர்ப்பது அவசியம். முன்கூட்டிய நரை முடி ஏற்படுவதற்கு மன அழுத்தமும் ஒரு காரணம் என்று சொல்லப்படுகிறது. அன்றாட வாழ்க்கையில் பல்வேறு மன அழுத்தம் குறைக்கும் செயல்களை சேர்ப்பதன் மூலம் இளநரை பிரச்சினைகளை தடுக்கலாம்.

மன அழுத்தத்தை போக்க கூடிய விடயங்களில் அவதானம் செலுத்த வேண்டும். விளையாட்டு, யோகா, தியானம், நல்ல தூக்கம் என்பன மன அழுத்தத்தை குறைக்க உதவுகின்றது.

அதேபோல தேங்காய் எண்ணெய், பாதாம் எண்ணெய் அல்லது தரமான எண்ணெய்களை கொண்டு உச்சந்தலையினை நன்றாக மசாஜ் செய்வதன் மூலம் உச்சந்தலைக்கு அதிக இரத்த ஓடடம் அதிகரிக்கிறது.

இதனால் முடி ஆரோக்கியம் பாதுகாக்கப்பட்டு இதனால் இளநரை தடுக்கப்படுகிறது. எனவே மேற்சொன்ன வழிமுறைகளை பின்பற்றி வந்தால் இளநரை பிரச்சினையிலிருந்து விடுபடலாம்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top