தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ஹன்சிகா.இவர் தற்போது அறிமுக இயக்குனர் ஜே.எம்.ராஜா சரவணன் இயக்கும் புதிய திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தத் திரைப்படத்திற்கு 'ரவுடி பேபி' என்று பெயரிடப்பட்டுள்ளது.
மேலும் இந்தத் திரைப்படத்தில் சத்யராஜ், மீனா, ராம்கி, சோனியா அகர்வால், ராய் லட்சுமி, உள்ளிட்ட பல முன்னணி பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இந்த நிலையில் இந்தத் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த பர்ஸ்ட்லுக் போஸ்டரை நடிகர் ஆர்யா தன்னுடைய சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.