நேர்கோண்ட பார்வை, வலிமை படங்களின் வெற்றிக்கு பின் நடிகர் அஜித்குமார்- எச்.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணையும் AK61 படத்தின் திட்டம் ஒரு ஆண்டுக்கு முன்பே முடிவு செய்யப்பட்டது. வலிமை படத்தை தொடர்ந்து அஜித்குமாரின் 61வது படம் துவங்கி உள்ளது.
இந்த படத்தின் 1st லுக்கை போனிகபூர் டிவிட்டரில் சில நாட்களுக்கு முன் போட்டோவை பகிர்ந்துள்ளார். அதில் கருப்பு வெள்ளையில் இருள் சூழ தாடியுடன் , காதில் கடுக்கனுடன் நடிகர் அஜித் புகைப்படம் இடம் பெற்றது.
இதை AK61 படத்திற்கான முன் தயாரிப்பு என போனி கபூர் அறிவித்து இருந்தார். இந்நிலையில் AK61 படத்தின் பூஜை இன்று காலை 9.01 க்கு ஐத்ராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்றது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் படத்தின் பூஜையுடன் படப்பிடிப்பும் இன்று முதல் ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் துவங்கி உள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்காக படக்குழு ஐத்ராபாத் சென்றுள்ளது.