இந்த திரைப்படம் 5 மொழிகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.தமிழில் உருவாகி உள்ள பீஸ்ட் படத்தை தெலுங்கு,மலையாளம்,கன்னடம்,இந்தி ஆகிய மொழிகளில் டப்பிங் செய்து வெளியிட உள்ளனர். சமீபத்தில் வெளியான பீஸ்ட் திரைப்படத்தின் டிரைலர் அனைவரையும் கவர்ந்து ஹிட் அடித்துள்ளது.
இந்நிலையில் இப்படம் குறித்து நீண்ட இடைவேளைக்கு பிறகு விஜய் கொடுத்த நேர்காணலை இயக்குனர் நெல்சன் தொகுத்து வழங்கினார்.அதில் கேட்கப்பட்ட கேள்விகள்,
1.நேர்காணல் கொடுத்து நீண்ட நாள் ஆகிடுச்சு அதுக்கு என்ன காரணம்?
நேரம் எல்லாம் இருக்கு ஒரு தடவை ஒரு நேர்காணல் கொடுத்தேன் அப்போ அவங்க எழுதுனது,படிக்கும் போது வேற மாதிரி இருந்துச்சு.சிலர் சொன்னாங்க நேர்காணல் படிக்கும் பொழுது தெனாவட்டா இருந்த மாதிரி இருந்துச்சுனு.இந்த மாதிரி எல்லாருக்கிட்டயும் நான் போய் சொல்லிட்டு இருக்க முடியாது.அதான் 10 வருஷம் ஆகிடுச்சு.இப்போ மொத்தமா பேசிடுறேன்.இந்த காரணத்தால தான் பேசாம இருந்தேன்.நான் யாரையும் தப்பா சொல்லல.
2.எப்போழுதும் ஆடியோ லாஞ்ச் இருக்கும் இப்போ அது இல்ல.பீஸ்ட் எப்படி இருக்கும்னு நினைக்குறீங்க?
படம் வந்த பிறகு தான் தெரியும்.என் படத்தை பத்தி நானே என்ன சொல்றதுனு தெரியல.சில படம் கிளிக் ஆகுது சில படம் ஆக மாட்டுது.சில படம் கதை கேட்கும் போது நல்லா இருக்கும்.சில படம் சரி வராது.நிறைய பேர் கேப்பாங்க படம் எப்படி இருக்குனு.நான் ஒன்னு சொல்லி அவங்க வந்து திட்டுரத்துக்கா.கண்டிப்பா நல்லா இருக்கும்னு நினைக்குறேன்.
3. பூஜா - அனிருத் பத்தி சொல்லுங்க?
அவங்க பயங்கர புரொப்பஷ்னல் அவங்க நல்லா கஷ்ட்டப்பட்டு நடிச்சிருக்காங்க நல்லா வந்து இருக்கு. அனிருத் நல்ல பீக்ல இருக்காரு.அனிருத் சர்ப்ரைஸ் பண்ணிட்டே இருக்காரு.எனக்கு எதாவது ஒன்னு பண்ணி தினமும் அனுப்பிட்டே இருக்காரு.அனிருத் கிட்ட அந்த உழைப்பு இருந்துகிட்டே இருக்கு.
4.உங்கள இன்னும் நல்லா தெரிஞ்சிக்கனும்.நீங்க எதுக்கு ரியாக்ட் பண்ணுவீங்கனு புரிஞ்சிக்கவே முடியல? நீங்க எந்த விஷயத்துக்கு பயங்கர எமோஷ்னல்?
கோவம் வரும் ஆனா ரியாக்ட் பண்ண மாட்டேன்.மனசு உள்ள இருக்கு ஆனா நீ காட்டவே மாட்டுறனு நண்பர்கள் சொல்லுவாங்க.நம்ப எடுக்குற நிறைய முடிவு கோவத்துல எடுக்குறது.யோசிச்சு முடிவு எடுங்க பொறுமையா இருங்க.டேக் இட் ஈசி.
5.கடவுள் நம்பிக்கை இருக்கா?
ஒரு படம் ஷூடிங் அப்போ விநாயகர் கோவில் போனேன்.கத்தி படம் ஷூட்ங்ல தர்காவுக்கு போனேன்.இங்க போகக்கூடாது அங்க போகக்கூடாதுனு சொல்லக்கூடாது.எது தோணுதோ அத செய்யனும்.
6. அம்மா,அப்பா உறவுகள் எப்படி இருக்கனும்?இத பத்தி உங்க கருத்து என்ன?
அப்பா ஒவ்வொரு குடும்பத்துக்கும் மரத்தோட வேர் மாதிரி.அப்பாக்கும் கடவுளுக்கும் ஒரு வித்யாசம் தான். கடவுள் நம்ம பார்க்க முடியாது,அப்பாவ பார்க்க முடியும் அது தான் வித்யாசம்.
7. உங்கட பையன் சஞ்சய் நடிப்ப எப்ப பார்க்குறது?
நான் அவனை எதுவும் சொல்லமாட்டேன்.அவங்களுக்கு புடிச்சதை பண்ணட்டும்.அவன் தான் எல்லாத்தையும் முடிவு பண்ணனும்.ஒரு தடவை பிரேமம் பட இயக்குனர் வந்தாரு எனக்கு தான் கதை சொல்ல வராருனு நினைச்சன்.உங்க பையன் கிட்ட கதை சொல்லனும் சொன்னாரு,கதை எனக்கு ரொம்ப பிடிச்சுது. சஞ்சய் ஒத்துக்கனும் அத பண்ணனும்னு நினைச்சேன்.ஆனா அவன் டைம் கேட்டான்.அவன் எது பண்ணாலும் எனக்கு சந்தோஷம்.
8. 20 வருஷம் டாப்ல இருக்கீங்க எப்படி இதை பண்றீங்க.உங்க எல்லாம் விஷயத்துலயும் ஃபேன்ஸ் உங்க கூடவே இருக்காங்க உங்கள பாதுகாத்துக்குறாங்க.அவங்களுக்கு நீங்க என்ன சொல்லுவீங்க?
வேற மாதிரி வேர மாதிரி என் ஃபேன்ஸ்.ஒரு உதாரணம்,கிரிக்கெட் மேட்ச் நடக்குது ஆடும் பொழுது 6 அடிக்கணும்னு நினைப்பாங்க, ஃபீல்டிங் பண்ணும் போது அவுட் ஆகணும்னு நினைப்பாங்க அந்த மாதிரி தான் பார்த்து நடந்துக்கனும்.
9. இத்தனை படத்துல,உங்க வாழ்க்கையோட கனெக்ட் பண்ணிக்கும் கேரக்டர்?
போக்கிரி கொஞ்சம் பீஸ்ட் கொஞ்சம் மொத்தத்துல நண்பன் கேரக்டர் மாதிரி.படத்துல பேசுற ஸ்டைல் தான் சொல்றேன் வெட்டுறது சண்டை அது எல்லாம் இல்லை.
10. பீஸ்ட் சக்சஸ் பிறகு எந்த ஊருக்கு எங்கள கூட்டிட்டு போணும்னு நினைப்பீங்க?
அமைதியா ஜன்னல் ஓரத்துல நல்லா பீல் பண்ணி பாக்குற மாதிரி இருக்கனும்.தெருவுல நடந்து போகனும், அவ்ளோ தான்.
11.ரொம்ப சாதாரணமா இருக்கீங்க, நீங்க எப்போமே இப்படி தானா?
நான் விரும்புறது வெறும் 100 ரூபாய் பிரியாணி தான்.இது மாதிரி சாதரணமா இருக்கனும்.
12. நாங்க 3 இயக்குனர் இருந்த போட்டோவ நீங்க தான் எடுத்தீங்க,அதை பார்க்கும் போது என்ன தோணுச்சு?
நீங்க முக்கியமா எதாவது பேசுவீங்கனு நினைச்சேன்.அடுத்த படத்துக்கு என்ன சம்பளம் வாங்கலாம்னு பேசிட்டு இருக்காங்கனு நினைச்சேன்.
13.புது வருட ரிசொலியூசன் எடுப்பீங்களா?
எப்போதும் எடுப்பேன் அடுத்த நாளே மாறிடுவேன்.நமக்கு எல்லாம் அது செட் ஆகாது.
14. ஸ்கிரிப்ட் எப்படி செலக்ட் பண்றீங்க?
75 சதவீதம் படத்தின் கதை கேட்பேன்.
15. விஜய்ய விஜய்யே நேர்காணல் பண்ணா நீங்க என்ன கேப்பீங்க?
இத்தனை வருஷத்துல தமிழ் சினிமாவ உயரத்துக்கு கொண்டு போகுற மாதிரி எப்போ படம் பண்ணுவீங்கனு கேப்பேன்.
16.தளபதி டேக் பவர்புல்லா இருக்கு?தளபதில இருந்து
தலைவராக விருப்பம் இருக்கா?
தளபதியா தலைவனானு ரசிகர்கள் தான் தேர்வு பண்ணனும்.
17.தேர்தலில் உங்க போட்டோ வச்சு தேர்தல்ல நின்னாங்க அதை பத்தி என்ன நினைக்கிறீங்க?
அவங்களுக்கு வாழ்த்துக்கள்,நல்லது பண்றவங்க பண்ணட்டும்.அவங்க நல்லது பன்றத நான் பின் தொடர்ந்துட்டு தான் இருக்கேன்.
18.ஒரு பாட்டு பாடுங்க ?
ஜாலியோ ஜிக்கானா பாடலை பாடினார் விஜய்.