அஜித் குமார் பல்லாண்டு வாழ வேண்டும் என்று அவருக்கு பலரும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
தன் கடின உழைப்பால் சினிமா துறையில் முன்னுக்கு வந்த அஜித் குமாரின் பிறந்தநாள் இன்று.அஜித்தின் பிறந்தநாளையொட்டி திரையுலக பிரபலங்களும்,ரசிகர்களும் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
தமிழக ரசிகர்கள் தவிர்த்து தெலுங்கு,கன்னட நடிகர்களின் ரசிகர்களும் அஜித் குமாருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.அஜித் ஒரு கடின உழைப்பாளி,பலருக்கும் முன்னுதாரனம் என்கிறார்கள் ரசிகர்கள்.
அஜித்தை வைத்து ஏ.கே. 62 படத்தை இயக்கவிருக்கும் விக்னேஷ் சிவன் தலக்கு வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.அந்த படத்தில் அஜித் ஜோடியாக நயன்தாரா நடிக்கவிருக்கிறார்.அஜித்தை வைத்து ஒரு படமாவது இயக்க வேண்டும் என்கிற விக்னேஷ் சிவனின் ஆசை நிறைவேறிவிட்டது.
அஜித் தற்போது ஹெச்.வினோத் இயக்கத்தில் ஏ.கே. 61 படத்தில் நடித்து வருகிறார்.படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து வருகிறது.நேர்கொண்ட பார்வை,வலிமையை அடுத்து தொடர்ந்து மூன்றாவது முறையாக வினோத் இயக்கத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால் #HBDAjithkumar என்கிற ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரெண்டாகிக் கொண்டிருக்கிறது.