சென்னை அணியின் இந்த தோல்விக்கு பிராதன அணித்தலைவரான தோனியை நீக்கிவிட்டு ஜடேஜாவை நியமித்தது தான் என கூறப்படுகிறது. தொடர்ந்து தோல்விகளை சந்தித்த பிறகு ஜடேஜா மீண்டும் தன் அணித்தலைவர் பதவியை தோனியிடமே கொடுத்து விட்டார் .
இந்நிலையில் ஜடேஜா அணித்தலைவர் பதவியை ராஜினாமா செய்தது குறித்து முன்னாள் சென்னை வீரர் ஷேன் வாட்ஸன் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
முதன் முதலில் சென்னை அணியின் அணித்தலைவர் பொறுப்பை ஜடேஜா ஏற்றார் என்றவுடன் எனக்கு பெரும் வியப்பாக இருந்தது. ஏனென்றால் தோனியை பற்றி அனைவருக்கும் தெரியும். மைதானத்தில் அவரது கட்டுப்பாடு, மரியாதை மற்றும் பிற வீரர்களுக்கு தலைவனாக அவர் அளிக்கும் உத்வேகம் ஆகியவை மிகப்பெரியுது.
ஜடேஜாவிற்கு அந்த இடத்தை ஈடு செய்வது கடினம். அது அவருக்கும் தெரியும். முதலில் தோனி காயம் அல்லது ஓய்வு காரணமாக அணித்தலைவர் பதவியில் இருந்து விலகியதாக நினைத்தேன். பிறகு இது ஜடேஜாவிற்கு தரப்பட்ட மிகப்பெரிய வாய்ப்பு என தெரிந்தது.
ஆனால் தோல்விக்கு பிறகு அவர் பதவி விலகியது வருத்தமாக இருந்தது. ஏனென்றால் அவர் சிறந்த வீரர், நுட்பம் வாய்ந்த விளையாட்டை வெளிப்படுத்தும் கிரிக்கெட் வீரர். ஆனால் பொதுவில் இதுபோன்ற நிலையில் ஜடேஜாவை வைத்து பார்க்கும்போது கவலையாக இருக்கிறது.
அவர் அணித்தலைவர் பதவியை துறப்பதாக சொல்லியிருக்க கூடாது. ஆனால் அவர் மீண்டும் தோனிக்கு தலைமையை கொடுத்தது சரி என்று தான் தோன்றுகிறது. ஏனென்றால் அணித்தலைவராக இருக்கும் ஒருவர் தன் பொறுப்பை மற்றொரிடம் தருகிறார் என்றால் அது உங்களுக்கு அதிகமான அழுத்தத்தை கொடுக்கும்.
பொது இடத்தில் வைத்து உங்களை அவமானப்படுத்தியது போல தோன்றும். நான் ராஜஸ்தான் அணித்தலைவர் பதவியை விட்டு விலகும் போது அப்படி தான் நினைத்தேன். இவை அனைத்தும் இருந்தும் ஜடேஜா அணித்தலைவர் பதவியை விட்டு விலகியது அவரது பெருந்தன்மையை காட்டுகிறது. என குறிப்பிட்டுள்ளார்