ஒரு காலத்தில் கொடிகட்டிப் பறந்த ஹீரோக்களின் வரிசையில், மிக முக்கியமானவர் நடிகர் சரத்குமார். இவரது படங்களில் இன்றுவரை நம்ம ரசிகர்களுக்கு ஒருவித ஈர்ப்பு இருக்கிறது. நடிப்போடு பின்னர் அரசியலில் குதித்து ஒரளவு வெற்றியும் கண்டார்.
அதன் பின்னர் அரசியலும் சினிமாவும் ஒரே நேரத்தில் சறுக்கிவிட, சினிமாவிலிருந்து கொஞ்சம் விலகினார் என்றுதான் சொல்ல வேண்டும்.
சில படங்களில் அண்மையில் சிறப்புத் தோற்றத்தில் தோன்றியிருந்த சரத்குமார், காஞ்சனாவில் எதிர்மறையான அத்தோடு சவாலான பாத்திரத்தில் தோன்றி பிரமிப்பையும் இரசிகர்களின் கைதட்டல்களையும் பெற்றுக் கொண்டார்.
இப்பொழுது சரத்குமார் மீண்டும், சினிமாவில் ஆர்வமாகி இருக்கிறார்.
இப்பொழுது ஒரு த்ரில்லர் கதையாக உருவாகி வரும் 'நீ நான் நிழல் ' படத்திலும், ஏ.வெங்கடேஷ் இயக்கத்தில் 'சண்டமாருதம்' படத்திலும் நடித்து வருகிறார். அத்தோடு இந்த சண்டமாருதம் படத்தில் இரட்டை வேடத்தில் கலக்கும் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார், அதன் பின்னர் , மிஸ்கின் இயக்கம் ஒரு புதிய படத்தில், இன்றைய இளைய நடிகர்களுக்குப் போட்டியாக சிக்ஸ்பேக் வைத்து நடிக்கவுள்ளார்.
ஒல்லிப் பிச்சான்கள் எல்லோரும் சிக்ஸ்பேக் வைத்து நடிக்கும் போது, எவ்வளோ கனமான பாத்திரங்களாக தோன்றிய சரத்குமாரினால், முன்னைய மிஸ்டர்.மெட்ராஸ் ஆணழகரால் சிறப்பாக சிக்ஸ்பேக் வைத்து நடிக்க முடியும்!
அவர் ஒரு திறமையான நடிகர் என்று, இப்பொழுதே சரத் புகழ் பாட ஆரம்பித்திருக்கிறார் இயக்குனர் மிஸ்கின்.
அதானே...
எத்தனை பேரைப் பார்த்திட்டோம்..