இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் அதர்வா முரளி 'DNA' என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
சித்தா திரைப்படத்தின் மூலம் கவனத்தை ஈர்த்த நடிகை நிமிஷா சஜயன் இந்தத் திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார்.
இந்தத் திரைப்படத்தில் முக்கிய அம்சம் என்னவெனில் இதில் இடம்பெற்றுள்ள 5 பாடல்களும் 5 வெவ்வேறு இசையமைப்பாளர்களால் உருவாக்கப்பட்டுள்ளது.
Action Thriller பாணியில் உருவாகியுள்ள இந்தத் திரைப்படம் இம்மாதம் 20ஆம் திகதி வெளியாகவுள்ளதாக திரைப்படக்குழு அறிவித்திருந்தது. இந்நிலையில் 'DNA' திரைப்படத்தின் Trailer வெளியாகியுள்ளது.