நடிகர் ஜீவா, இயக்குநர் ராஜேஷ் மற்றும் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா ஆகியோருக்கு Benchmark Filmஆக அமைந்த திரைப்படம்தான் 'சிவா மனசுல சக்தி'.
2009ஆம் ஆண்டு வெளியான இத் திரைப்படம் இரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.
16 வருடம் கழித்து இந்த வெற்றிக் கூட்டணி மீண்டும் இணையவிருப்பதாக நடிகர் ஜீவா தனது X தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இத் திரைப்படம் தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவருமென்றும் அப்பதிவில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.